மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி பல்லவி. துல்கர் நடித்த களி என்ற படத்தில் நடித்தார், அந்த படமும் வசூல் சாதனை புரிந்தது.
இந்த இருப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி தெலுங்கு சினிமாவில் கால்பதிக்க ஆர்மபித்தார். 2017 இல் அவர் நடித்த பிடா படம் மாபெரும் வெற்றியடைந்தது, இதனால் தெலுங்கிலும் மார்க்கெட் கூடிவிட்டது. இந்த படத்தில் வச்சிந்தி என்ற பாடலும் படு ஹிட் அடைந்தது.
இந்த பாடல் யூடுயூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எந்த ஒரு திரைப்பட பாடலும் யூடியூபில் இத்தனை பார்வையாளர்களால் பார்க்கப்ட்டது இல்லை.
இதுநாள் வரை தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கொலவெறி டி ‘ பாடல் இதுவரை 172.7 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு முதல் இடத்தில இருந்தது. தற்போது சாய் பல்லவியின் ‘வச்சந்தி’ பாடல் 174 மில்லியன் பார்வையாளர்கள் பெற்று சாதனை படைத்துள்ளது.