அபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.! என்ன காரணம் பாருங்க.!

0
2700
abhirami-sakshi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்ந்து வருகிறது. தற்போது தமிழில் நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் யார்? அந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்று தெரிந்துவிடும். சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரீஸ் டாஸ்கில் பல உணர்ச்சிபூர்வமான சம்பவங்களும்,கண்கலங்க வைக்கும் நிகழ்வுகளும் நடந்தது.அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.

Image

பிக் பாஸ் 3ல் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை சாக்ஷி. இவர் தற்போது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் சிலர் பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்தித்து அவர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள்.

இதையும் பாருங்க : 40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.!

- Advertisement -

நீங்கள் அவர்களை சந்தித்து பேசும்போது நல்ல விஷயங்களையும் அவர்கள் வாழ்வில் முன்னேற அவசியமான கருத்துக்களையும் பற்றி கூறுங்கள். அதுவும் பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு யார் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். சுயநலமாக எண்ணாமல் இருங்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து நெட்டிசன்கள் பலபேர் பல கருத்துகளை பதிவிட்டு, இதை பார்த்தால் தற்போது அபிராமி தான் போட்டியில் இருந்து வெளியே வந்தவுடன் மற்ற போட்டியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டு வருகிறார் என்று கூறி உள்ளார்கள். இதனால் சாக்ஷி அபிராமி தான் குறிப்பிட்டு கூறுகிறார் என்று நெட்டிசன்கள் தெரியப்படுத்துகின்றன.

இந்த நிலையில் அபிராமியின் ரசிகர் ஒருவர் சாக்க்ஷியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமன்ட் ஒன்றை செய்தார், அதில் உங்களுக்கு ஒரு அறிவுரை வழங்க ஆசை படுகிறேன். நீங்கள் பெரும்பாலும் மற்ற போட்டியாளர்களை பற்றி தவறாக தான் பேசி வருகிறீர்கள். அது அவர்களுடைய பிரச்சனைஇல்லை . உங்களிடம் தான் பிரச்சனை இருக்கிறது அதை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். உங்களை காயப்படுத்தும்படி நான் இதனை சொல்லவில்லை என்று சாக்ஷிக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

இவ்வாறு கமன்ட் செய்தது அபிராமியின் ரசிகர் என்று தெரிந்தும் கூட அந்த ரசிகரின் கமெண்ட்டிற்கு பதிலளித்த சாக்க்ஷி, நாளையிலிருந்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறி விடுங்கள். 6 முதல் 12 மணிவரை நான் என்ன செய்யக்கூடாது என்பதையும் சொல்லிவிடுங்கள். அதற்கு ஏற்றார் போல நான் நடந்துகொள்கிறேன் என்று நக்கலாக பதிலளித்துள்ளா.ர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வரை ரத்தமும் சதையுமாக இருந்த அபிராமி மற்றும் சாக்க்ஷி கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் மறைமுகமாக ஒருவரை ஒருவர் ஆடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.