பிக் பாஸ் 3 காக கமல் கேட்ட சம்பளம்.! கேட்டா ஆடிப்போவீங்க ஆடி.!

0
842
Bigg-Boss
- Advertisement -

விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தான். இன்னும் சில மாதங்களில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Bigg-bos-kamal

ஹிந்தியில் 12 சீசன் களை கடந்த நிகழ்ச்சியில் தமிழில் இரண்டு சீசன்களை மட்டுமே கடந்துள்ளது. இந்த இரண்டு சீசன்களில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது .இந்த நிலையில் மூன்றாவது சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது ஏற்கனவே நமது வலைதளத்தில் தெரிவித்திருந்தோம்.

இதையும் படியுங்க : விஜய் டீவியிலும் இல்லை கலர்சிலும் இல்லை.! பிக் பாஸ் 3 இந்த தொலைக்காட்சியில் தானாம்.!

- Advertisement -


அதுபோக பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கமல் பங்கு பெறுவாரா மாட்டாரா என்ற மிகப்பெரிய கேள்வி குறியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது . பிக்பாஸ் மூன்றாவது நிகழ்ச்சியை மீண்டும் கமலை வைத்து தொகுத்து வழங்க பிக் பாஷ் நிறுவனம் திட்டம் தீட்டி வருகிறது. ஆனால், கமலின் சம்பளத்தை கேட்டு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தும் எண்டிமால் என்ற நிறுவனம் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு சீஸனும் நடிகர் கமலால் கொஞ்சம் சுவாரசியமாக சென்றது. எனவே, பிக்பாஸ் டென்ஷன் மூன்றாவது சீஸனிலும் கமலை தொகுத்து வழங்க அணுகியுள்ளனர். ஆனால், நடிகர் கமல்ஹாசன் ஒரு எபிசோடுக்கு ஒரு கோடி வீதம் 100 நாட்களுக்கு 100 கோடியை சம்பளமாக கேட்டுள்ளாராம். இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது பிக்பாஸ்குழு கமலை தொகுப்பாளராக போடலாமா இல்லை வேறு ஏதாவது நடிகரை கமிட் செய்யலாமா என்று யோசித்து வருகின்றதாம்.

-விளம்பரம்-
Advertisement