90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சித்த மருத்துவர் சிவராஜ் காலமானார் – காரணம் இதான்.

0
1437
sivaraj
- Advertisement -

தமிழ் நாட்டின் பிரபல சித்த மருத்துவரான சிவராஜ் காலமாகியுள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம், கடந்த 7 தலைமுறைகளாக கிட்டத்தட்ட 206 வருடங்களாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்துள்ளனர். இன்றை இளைஞர்களை அதிகம் பாதிக்கும், ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி மற்றும் இல்லற பிரச்சினைகளுக்கு, சித்த மருத்துவம் மூலம் தீர்வு கொடுத்துவந்தனர் இந்த குடுமப்த்தினர். அதிலும் டாக்டர் சிவராஜ் இது தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கி மக்களின் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்து வந்தவர்.

-விளம்பரம்-

இவர் தமிழ்நாட்டு இளசுகள் மத்தியிலும் பிரபலம் தான் இவரை தழுவி பல்வேறு படங்களில் கூட காட்சிகள் இடம்பெற்றுஇருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சிவராஜ் சிவகுமார் உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததுள்ளார் சிவராஜ் சிவகுமார். இப்படி ஒரு நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(பிப்ரவரி 10) நள்ளிரவு  12 .5 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

இதையும் பாருங்க : நடிகைங்களாவது படத்துக்காக தான் கிளாமர் காட்றாங்க, ஆன நீ ? இதுல புரட்சி மண்ணாங்கட்டி வேற – கேலி செய்த நபருக்கு பொறுமையாக ஜூலி அளித்த பதில்.

- Advertisement -

டாகடர் சிவராஜின் பூத உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விகமான அகஸ்தியர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலை அவரின் உடல் நல்லடக்கம் நடைபெறஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவராஜ் சித்த மருத்துவருக்கு வயதானவர்களை விட வயது வந்த இளசுகளின் ரசிகர்கள் தான் அதிகம். அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் இவருக்கு ஏராளம். பள்ளிக்கு செல்லும் முன் தொலைக்காட்சியில் இவரது நிகழ்ச்சியை பார்த்து பள்ளிக்கு லேட்டாக சென்ற 90ஸ் கிட்ஸ் கூட்டமும் இருக்கிறது. அதிலும் இவர் 90ஸ் கிட்ஸ்களை செல்லமா பேரக் குழந்தைகளா என்று தான் அழைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement