நடிகைங்களாவது படத்துக்காக தான் கிளாமர் காட்றாங்க, ஆன நீ ? இதுல புரட்சி மண்ணாங்கட்டி வேற – கேலி செய்த நபருக்கு பொறுமையாக ஜூலி அளித்த பதில்.

0
18543
julie

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.

- Advertisement -

அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த லாக் டவுன் சமயத்தில் மட்டும் அம்மணி ஏக்கச்செக்க போட்டோ ஷூட்களை நடத்திவிட்டார். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் கமன்ட் தான் வருகிறது.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சிலர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட, அதற்கு நெட்டிசன் ஒருவர், உலகத்திலேயே எரிச்சலான மூஞ்சி என்று கமன்ட் செய்த்தார். அதற்கு ஜூலி, பாக்காதீங்க ப்ரோ என்று பதில் அளித்துள்ளார்.

அதே போல மற்றொருவரோ, பிரபலமடைய இப்படி கீழ்தரமா போட்டோ ஷூட் நடத்துறீங்க. தமிழ் பொண்ணு தமிழ் பொண்ணுன்னு சொல்லிட்டு இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க. இப்படி காற்றது தான் தமிழ் கலாச்சாரமா ? பெரிய ஹீரோயின்ஸ் கூட படத்துக்காக தான் கிளாமர் காட்றாங்க. ஆன, இஷ்டா பிக்ஸ்க்கு காட்டறீங்க. இதுல புரட்சி மண்ணாங்கட்டி வேற பேசறீங்க என்று கமெண்ட் செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்த ஜூலி, நன்றி ப்ரோ, என் வாழ்க்கை என் இஷ்டம். என் வாழ்க்கையை வாழ தான் நான் பிறந்தேன். மற்றவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement