பாகுபலி நடிகரின் வீட்டிற்கே சென்று கோடி ரூபாய் காரை பரிசளித்த சல்மான் கான்.

0
18762
Salman-Khan
- Advertisement -

நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் கன்னட மொழியில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். கிச்சா சுதீப் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், தொகுப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். தமிழில் நான் ஈ, பாகுபலி, புலி, முடிஞ்சா இவனப் பிடி உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார். அதோடு தமிழில் தான் நடிக்கும் படங்களுக்கு இவரே டப்பிங்கும் செய்வார். இவரின் சிறந்த திரைப்படங்களுக்காக பல விருதுகளை பெற்று உள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கிச்சா சுதீப் அவர்கள் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

-விளம்பரம்-

மேலும், கிச்சா சுதீப் அவர்கள் இந்தியில் கூட தனெக்கென ஒரு ரசிகர் படையை சேர்த்து உள்ளார். பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து நடிகர் பிரபு தேவா அவர்கள் “தபாங் 3” என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டய கிளப்பி உள்ளது. அதோடு தபாங் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களிடம் படத்தின் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இந்தியில் கூட நடிகர் கிச்சா சுதீப் ரசிகர்களை தன்வசம் படுத்தி உள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதோடு வசூலிலும் பட்டையை கிளப்பியது என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : என் படத்தை பார்த்து தான் விஜய்யும் அதே கேட்டார். மோகன் சொன்ன ரகசியம். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் நடிகர் கிச்சா சுதீப் அவர்களின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அவருடைய நடிப்பை பாராட்டி நடிகர் சல்மான் கான் அவர்கள் நடிகர் கிச்சா சுதீப் அவர்களுக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை சுதீப் வீட்டிற்கே சென்று பரிசளித்து உள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து உள்ளது என்று கூறலாம். இதற்கு நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது, நம் வாழ்க்கையில் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்பதை நான் இந்த நிகழ்வு மூலம் எடுத்துக் கொள்கிறேன். நடிகர் சல்மான் கான் அவர்களுக்கு மிகவும் நன்றி என்றும் தெரிவித்து உள்ளார். நடிகர் கிச்சா சுதீப்பை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Image result for kiccha sudeep salman khan

நடிகர் சல்மான்கான் அவர்களுக்கு வாகனங்கள் மீது அதிக ஆர்வம் உடையவர். இவர் பிரபலமான எஸ்யூவி கார்கள், சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தும் வாகனங்கள், சக்திவாய்ந்த எஞ்சின்களை கொண்ட பைக்குகள் என பல வாகனங்களை வைத்து உள்ளார். இவர் ஆடம்பர கார்களை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அதை மற்றவருக்கு பரிசாக வழங்குவதும் மிகவும் பிடிக்கும் என்பதும்குறிப்பிடத்தக்கது . அதற்கு உதாரணமாக இந்த நிகழ்வையும் சொல்லலாம்.

-விளம்பரம்-
Advertisement