என் படத்தை பார்த்து தான் விஜய்யும் அதே கேட்டார். மோகன் சொன்ன ரகசியம். வைரலாகும் வீடியோ.

0
42670
mohan
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மோகன். இவரை வெள்ளி விழா நாயகன், மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். இவரை புகழ்பெற்ற கோலிவுட் நடிகர் என்று கூட கூறுவார்கள்.கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரை இந்த அளவிற்கு புகழின் உச்சத்திற்கு காரணம் தமிழ் திரைப்படங்கள் தான்.இதுவரை தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் மோகன் தன்னுடைய நடிப்பின் ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு பட கம்பெனிக்காக பட வாய்ப்பு தேடி அலைந்தார்.

-விளம்பரம்-
மோகன்

- Advertisement -

மோகன் திரையுலகிற்கு வந்து 42 வருடங்கள் முடிந்து 43 வது வருடம் தொடங்கிவிட்டது. இவர் தமிழில் மகேந்திரன் இயக்கிய ‘நெஞ்சை கில்லாதே’ படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, விதி, மனைவி சொல்லே மந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இதன் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. மேலும், சினிமா துறையில் ஒரு பெரிய ஹீரோவாகவும் ஆனார் மோகன். ஆனால், புகழின் உச்சியில் இருந்த மோகன் திடீரென்று தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.

இதையும் பாருங்க : பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெயம்ரவின் கெட்டப் என்ன தெரியுமா ?

சினிமா உலகில் திரை புகழின் உச்சத்தில் மோகன் இருந்த போது அவர் மீது நடிகை ஒருவர் காதல் வயப்பட்டார். அவரிடம் தன்னுடைய காதலையும் கூறினார் அந்த நடிகை. ஆனால், நடிகர் மோகன் அவர்கள் முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் கடும் கோபம் அடைந்த அந்த நடிகை, மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக வதந்தியை பரப்பி விட்டார் இதனால் மோகனின் திரை வாழ்க்கை கேள்விக்குறியானது. இந்த நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து மோகன் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கஉளளார்.

-விளம்பரம்-

வீடியோவில் 3:50 நிமிடத்தில் பார்க்கவும்

சமீபத்தில் நடிகர் மோகன் fan meet ஒன்றை ஏற்பாடு செய்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது பேசிய அவர், மேடையில் ராஜேந்திரன் என்ற காஸ்டியூம் டிசைனரின் பெயரை குறிப்பிட்டு என்னுடைய படங்களில் காஸ்டியூம் எவ்வளவு பிரபலமாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு முக்கிய காரணம் ராஜேந்திரன் என்ற என்னுடைய காஸ்ட்யூமர் தான். அவர் ஒரு மிகச்சிறந்த காஸ்ட்யூமர். தற்போது இருக்கிற இளையதளபதி விஜய்க்கும் அவர்தான் காஸ்ட்யூமர் மேலும், விஜய் என்னுடைய படங்களை பார்த்து தான் எனக்கும் அந்த காஸ்ட்யூமர் வேண்டும் என்று அவரை அழைத்தார். தற்போது அவருக்கு உடல்நலம் சரியில்லை ஆகையால் அடுத்த முறை அவரை கண்டிப்பாக அழைத்து வருகிறேன் என்று கூறினார் மோகன்.

Advertisement