பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக களமிறங்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள்.
இருந்தாலும் 2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான்கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. அதிலிருந்து மீண்டு இவர் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பல ஆண்டு காலமாக சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்தார் என்று சொல்லலாம்.
சல்மான்கான் – ஐஸ்வர்யா ராய் காதல்:
பாலிவுட்டில் திருமணம் செய்யாமல் இருக்கும் ஹீரோ என்று கேட்டால் அனைவரும் சல்மான்கான் உடைய பெயரை தான் சொல்வார்கள். சல்மான்கான் அவர்கள் ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து வந்தார். ஆனால், அந்த காதல் சேரவில்லை என்று தான் சொல்லணும். பிறகு ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். ஆனால், சல்மான்கான் மட்டும் திருமணம் செய்து கொள்ள வில்லை.
சல்மான்கான் காதல் பற்றிய விவரம்:
மேலும், ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு நடிகை கத்ரீனா கைஃப் உட்பட பலருடன் சல்மான்கான் காதலித்து இருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால், எதுவும் உண்மை இல்லை. இருந்தாலும் சல்மான்கான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது சல்மான்கான் திடீரென நடிகை சோனாக்ஷி சின்ஹாவை திருமணம் செய்து கொண்டிருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி வருகிறது. பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்பவர் சோனாக்ஷி சின்கா.
சல்மான்கான் – சோனாக்ஷி சின்கா திருமணம்:
இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியானது. இது பாலிவுட்டில் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சல்மான்கானுடன் சோனாக்ஷி சின்கா சில படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சமூக வலைத்தளங்களில் வெளியான இவர்களுடைய திருமண புகைப்படம் உண்மையா? என்று ஆராய்ந்து விசாரணை நடத்தினார்கள்.
சல்மான்கான் – சோனாக்ஷி சின்கா திருமணம் போலி:
அப்போது அந்த புகைப்படங்கள் எல்லாம் போலியானது என்பது தெரியவந்தது. அது உண்மையில் ஆர்யா – சயீஷா திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வதந்தியை ஏற்படுத்துவதற்காகவே இது போன்று எடிட் செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருப்பதாக பாலிவுட் பிரபலங்கள் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற புகைப் படங்கள் வெளியாவது இது முதல் முறை கிடையாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஆமிர் கான், பாத்திமா சனா ஷேக் என்பவரை மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. அவை குறித்து விசாரித்த போது போலியானவை என்று தெரிய வந்தது. அந்த வகையில் சல்மான்கான் – சோனாக்ஷி சின்கா திருமணமும் போலி, வதந்தி என்று கூறப்படுகிறது.