ஜோலிவுட் நட்சத்திரம் அஜித் நடித்த வீரம் திரைப்பம் தமிழில் வெளியாகி பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தி மொழியில் உருவாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக இவர் களமிறங்கி இருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. இதனை தொடர்ந்து சல்மான் கான் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Advertisement

சல்மான்கானின் திரைப்பயணம்:

ஆனால், இடையில் மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் நடிக்க தொடங்கினார். ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இவருடைய நடிப்பில் வெளி வந்திருந்த தபாங் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது.

அஜிதின் “வீரம்” ஹிந்தி ரீமேக் :

அதை தொடர்ந்து இந்த படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி இருந்தது. இப்படி இவர் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழில் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக்கி இருக்கிறது. இந்த ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் ஃபர்ஹாத் சம்ஜி இயக்குகிறார். இவர் பிரபல இசையமைப்பாளரும் ஆவார். ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் சல்மான் கான் அஜித்தாகவும், பூஜா ஹெக்டே தமன்னா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றார்.

Advertisement

விமர்சனத்திற்கு உள்ளாகிய ரீமேக் :

மேலும் இப்படத்திற்கு Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த ட்ரைலரில் பார்க்கும் போது அஜித் நடித்த “வீரம்” திரைப்படத்திற்கும் இப்படத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லாதது போன்று இருக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி இந்த படத்தை வீரம் படத்தின் ரீமேக் என்று சொல்லலாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

தீட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் :

அஜித் நடித்து தமிழில் வெளியான “வீரம்” படத்தில் அஜித் முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரமாக இருப்பார். ஆனால் இங்கே சல்மான் கான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக இருக்கிறார். ஏற்கனவே நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியிருக்கும் “கைதி” ரீமேக் திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் ஆதரப்தியை ஏற்படுத்திய நிலையில், சல்மான் கான் நடித்து வரும் வீரம் ரீமேக் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சங்களை பெற்று வருகிறது.

Advertisement