‘நாக சைதன்யாவால் தான் எனக்கு இந்த பழக்கம் வந்தது’ என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சமந்த அளித்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இதனால் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமந்தா நடிக்கும் படங்கள்:
அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா என்ற படத்தில் ‘ஊ சொல்லிறியா’ என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தா கமிட்டாகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார். தற்போது சமந்தா நடிக்கும் பிரமாண்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சாகுந்தலம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்:
தற்போது சமந்தா அவர்கள் சாகுந்தலம் என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படம் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமந்தா பிரம்மிக்க வைக்கும் அழகில் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மயங்கி விட்டார்கள் என்றே கூறலாம். மேலும், இதுவரை கண்டிராத லுக்கில் சமந்தா இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ்க்கு சமந்தாவும் காத்து கொண்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து சமந்தா அவர்கள் யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
யசோதா திரைப்படம் பற்றிய தகவல்:
யசோதா திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி- ஹரிஷ் இயக்குகிறார்கள். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட கதை. இந்த படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்காக 3 கோடி ரூபாய் செலவில் நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படி தொடர்ந்து பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமந்தா எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.
நாக சைதன்யாவை பற்றி சமந்தா சொன்னது:
இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள், சுற்றுலா பயணம் என அனைத்தையுமே சோசியல் மீடியாவில் பதிவிடுவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர், பிட்னஸ் மீது உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் வர என்ன காரணம்? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சமந்தா கூறியிருப்பது, நான் உங்களுக்கு பெரிய ரகசியத்தை சொல்கிறேன். நான் ஜிம்மிற்கு போக ஆரம்பித்ததே நாக சைதன்யாவை பார்ப்பதற்காகத் தான். நாகசைதன்யா எப்போதும் ஜிம்மிற்கு செல்வார். அதனால் நானும் ஜிம்மில் இனைந்தேன் என்று தன்னுடைய முன்னாள் கணவர் குறித்த ரகசியத்தை சமந்தா பகிர்ந்திருக்கிறார். தற்போது சமந்தாவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.