4வது திருமண நாளுக்கு 4 நாள் இருக்கும் நிலையில் கணவரை பிரிவதாக அறிக்கை வெளியிட்ட சமந்தா.

0
3289
samantha
- Advertisement -

பிரபல நட்சத்திர தம்பதிகளாக நாக சைத்தன்யா – சமந்தா தம்பதி பிரிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு அவர்களது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் சமந்தா, நாக சைதன்யா குறித்த விவாகரத்து செய்திகள் தான் பயங்கரமாக பரவி வந்து கொண்டிருக்கின்றது. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா உலகிலுமே இவர்களைப் பற்றிய செய்திகள் தான் அதிகம் இடம்பெறுகின்றன என்று சொல்லலாம். தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒருவர்.

-விளம்பரம்-
Samantha Akkineni's reaction to being asked about rumoured divorce from  Naga Chaitanya goes viral | Filmfare.com

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சமீப காலமாகவே சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிக்கிறார்கள் கூடிய விரைவில் இவர்கள் விவாகரத்து பெறுகிறார்கள் என்ற பல சர்ச்சைகளும், வதந்திகளும் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் இருந்தது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டின் மேல் படு மாஸாக நின்று கொண்டு இருக்கும் கமல் – வெளியான புதிய ப்ரோமோ வீடியோ.

- Advertisement -

ஆனால், இதுகுறித்து இருவரும் எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக நாக சைத்தன்யா – சமந்தா இருவரும் தங்கள் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர். ஆனால், அதில் என்ன காரணத்திற்காக இருவரும் பிரிகின்றனர் என்பதை இருவருமே சொல்லவே இல்லை.

மாறாக தாங்கள் இருவரும் நண்பர்களாக தொடருவோம் என்றும் தங்களின் இந்த முடிவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் மீடியா என அனைவருமே தங்களின் இந்த முடிவுக்கும் எங்களின் பிரைவசிக்கும் மதிப்பு கொடுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். வரும் 7 ஆம் தேதி இவர்களின் 4வது திருமணம் நாள் கொண்டாடபட இருந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement