அச்சு அசலாக ரவி வர்மாவின் ஒவியங்களை போன்று போஸ் கொடுத்த சமந்தா,ஸ்ருதி,நதியா.

0
69834
RAVIVARMA

இந்த உலகில் ரவி வர்மாவின் ஓவியங்களை பற்றி பேசாதவர்கள் யாரும் இல்லை. ராஜா ரவிவர்மா அவர்கள் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் நவீன காலத்திற்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவியக் கலையை அப்படியே இந்தியாவில் ஓவியக் கலைக்குள் புகுத்தினார். இவருடைய ஓவியங்கள் எல்லாம் உலக அளவில் புகழ் பெற்று சாதனை படைத்து உள்ளது. இவர் சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக் கொண்டார்.

Image may contain: 1 person, close-up

- Advertisement -

பின் 1862 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையையும் பயின்றார். நாம் தற்போது கடவுளாக வணங்கி வரும் பெண் கடவுள்களின் உருவங்களை இவர் தான் வரைந்தார். தென்னிந்தியப் பெண்களை இந்துக் கடவுளரின் உருவங்களாக வடிவமைத்தவரும் ரவி வர்மா தான். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி,சீதை போன்ற பல தெய்வங்களின் உருவங்களை வரைந்து உலக புகழ் பெற்றவர்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளில் இவருடைய இவருடைய ஓவியங்கள் புகழ் பெற்றது. இன்று வரை இவருடைய ஓவியத்திற்கு நிகராக யாரும் இல்லை என்று தான் சொல்லணும். இந்நிலையில் புகழ் பெற்ற ரவி வர்மனின் ஓவியங்களை போலவே பிரபல புகைப்படக் கலைஞர் வெங்கட்ராம் அவர்கள் நடிகைகளை வைத்து போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளான குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், நதியா, லக்ஷ்மி மஞ்சு, ஷோபனா உள்ளிட்ட பல நடிகைகளை வைத்து ஜி.வெங்கட்ராம் போட்டோ ஷுட் நடத்தி உள்ளார்.

-விளம்பரம்-

இது லிமிடெட் எடிசன் காலண்டருக்காக நடத்தப்பட்ட போட்டோ ஷூட். இந்த போட்டோ ஷூட்டில் நடிகைகள் அனைவரும் அச்சு அசலாக ரவி வர்மா வரைந்த ஓவியங்களை போலவே போஸ் கொடுத்து உள்ளார்கள். மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது ரவி வர்மா வரைந்த ஓவியமா! அப்படியே ரவி வர்மா ஓவியம் போலவே இந்த புகைப்படங்கள் உள்ளதே என்று கூறி கலைஞர் ஜி.வெங்கட்ராம் அவர்களை பாராட்டியும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement