ஷூட்டிங்கில் நேர்ந்த விபரதீதம், ஆற்றில் கழிந்த காரில் சிக்கிய சமந்தா – பதறிய படக்குழு. என்ன ஆச்சி செல்லத்துக்கு.

0
153
samantha
- Advertisement -

ஷூட்டிங்கின் போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் நடிகை சமந்தா நீரில் மூழ்கியிருந்த சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே இவருடைய மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமந்தா நடித்த படங்கள்:

இருந்தாலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் கிரிக்கெட் பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

குஷி படம்:

இந்த படத்தில் கதிஜா பாத்திரத்தில் நடித்த சமந்தாவிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து இவர் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், சாகுந்தலம், யசோதா போன்ற பல படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவா நிர்வாணா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் சமந்தா, விஜய் தேவர் கொண்டா இருவருமே பங்கேற்று நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

விபத்தில் சிக்கிய சமந்தா-விஜய் தேவர்கொண்டா:

இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்கி இருந்தர்கள். பின் அங்குள்ள ஆற்றின் குறுக்கே இருவரும் காரில் கடந்து செல்வது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது எதிர்பாரா விதமாக கார் நிலை தடுமாறி ஆற்றில் தவறி விழுந்துள்ளது. காருடன் சேர்ந்து இருவருமே நீரில் மூழ்கி இருந்தார்கள். இதை பார்த்து பதறிப்போன படக்குழு உடனடியாக விரைந்து இருவரையும் பத்திரமாக மீட்டு இருக்கின்றனர். இதனை அடுத்து சமந்தா, விஜய் தேவர்கொண்டாவுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

முடிவடைந்த முதற்கட்ட படப்பிடிப்பு :

இருவருக்கும் சற்று வலி அதிகமாக இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் தற்போது குணமாகி இருக்கின்றனர். இதையடுத்து நேற்று இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது. மேலும், இந்த படம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ரிலீஸாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து சமந்தாவின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் பலரும் நலம் விசாரித்து வருகிறார்கள்.

Advertisement