காத்து வாக்குல ரெண்டு காதலால் காத்தில் பறந்த காதல் வாழ்க்கை – கண்டிஷனால் ஏற்பட்ட விவாகரத்து ?

0
47661
samantha
- Advertisement -

சோசியல் மீடியாவை திறந்தாலே போதும் சமந்தா– நாக சைதன்யாவின் விவகாரத்து பஞ்சாயத்து தான் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது காத்துவாக்குல இரெண்டு காதல் விவகாரத்தால் இவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக நீடித்து இருந்த சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா –நாக சைதன்யா இருவரும் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-
Kaathu Vaakula Rendu Kaadhal Official First Look-Teaser | Vijay Sethupathi  | Nayanthara | Samantha - YouTube

நன்றாக போய் கொண்டு இருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் சமீப காலமாக சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவிருப்பதாக பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து நிலையில் இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். மேலும், திருமணம் ஆகியும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டு இருந்தது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : கவின் படம் டூ காமெடி ராஜா. முதல் கல்யாண நாளை கூட கொண்டாடாமல் பிக் பாஸில் கலந்து கொண்டுள்ள ராஜு.

- Advertisement -

திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் குடும்பத்திற்கு வாரிசு ஒன்றை தரவில்லை என்றும் சமந்தா படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள சில நிபந்தனைகள் விதித்தது மட்டுமில்லாமல் நாகசைதன்யா குடும்பத்துக்கு சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தன்னையும் ஒரு பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்றும் இதனால் இவர்களுக்கிடையே விரிசல் ஏற்பட்டு இருக்கிறது என பல தகவல்கள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் காத்துவாக்குல 2 காதல் படத்தால் தான் இவர்கள் பிரிந்ததாக கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி உடன் காத்துவாக்குல 2 காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிகை சமந்தா நடிக்கிறார்கள். இந்த படத்தில் சமந்தா நடிக்க கூடாது என்று நாக சைதன்யா தடை போட்டுள்ளார். அதையும் மீறி சமந்தா அவர்கள் நயன்தாராவுடன் சேர்ந்து இரண்டாவது நடிகையாக நடித்து வந்துள்ளார். மேலும், படத்தில் நடிகை அமலாவை இமிடேட் செய்யும் வளையோசை பாடலுக்கு விஜய் சேதுபதியுடன் ஜோடியாக சமந்தா பேருந்து செல்லும் காட்சி வீடியோ வெளியானது.

-விளம்பரம்-

இதனால் சமந்தா குடும்பத்தில் பல பிரச்சினைகள் உருவானதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால் தான் இவர்கள் பிரிய போகிறர்கள் என்று தற்போது சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் திருமண வாழ்க்கையில் பிரிந்தாலும் கடைசிவரை நட்பாக இருப்போம் என்று கூறி உள்ளார்கள். பொதுவாகவே நடிகர், நடிகைகளுக்கு விவாகரத்து ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே என்று கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

Advertisement