சமந்தாவின் விவாகரத்து குறித்தும் முன்னாள் மருமகன் குறித்தும் சமந்தாவின் தந்தை போட்ட முகநூல் பதிவு வைரல்.

0
413
sam
- Advertisement -

சமந்தாவின் விவாகரத்து முடிவு குறித்து அவருடைய தந்தை பகிர்ந்து இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா இருவரும் தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்ததன் மூலம் நண்பர்களாக பழகத் தொடங்கினார்கள். பின் சமந்தா- நாக சைதன்யா இருவரும் காதலிக்க துவங்கினார்கள். அதன் பின் இவர்கள் காதல் விவகாரம் வெளியே வர துவங்கியது.

-விளம்பரம்-

பின் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து மிக பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. மேலும், இருவரும் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவிக்கவே இல்லை. அதன் பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமந்தா- நாக சைதன்யா நடிக்கும் படங்கள்:

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி இருந்த காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் சமந்தா அவர்கள் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலி வுட் படம், சாகுந்தலம், யசோதா, குஷி போன்று பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

சமந்தா- நாக சைதன்யா பிரிவுக்கு பின்:

அதேபோல், நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யா அவர்களின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. தற்போது அவருக்கு தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்களாம். மேலும், விவாகரத்துக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் அவர்களுடைய பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமந்தாவின் விவாகரத்து முடிவு குறித்து அவருடைய தந்தை பதிவிட்டுள்ள பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சமந்தா தந்தை போட்ட பதிவு:

அதில் அவர் கூறியிருப்பது, ஆரம்பத்தில் சமந்தாவின் முடிவை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். பின் இது அவருடைய முடிவு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சமந்தா- நாக சைத்தன்யா இருவருமே எனக்கு ஒன்று தான். அவர்களுடைய திருமணத்தை என்னால் மறக்க முடியவில்லை. நாக சைதன்யா குடும்பத்தினருடன் தொடர்ந்து நான் நட்பில் தான் இருக்கிறேன். விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்த பதிவு தற்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement