சிவாகார்த்திகேயன் மற்றும் சூரி என்றாலே ஒரு நல்ல கெமிஸ்டிரி உள்ள ஹீரோ-காமெடியன் இணைதான். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இவர்கள் இணைந்த படங்களில் எல்லாம் காமெடியால் செம்ம ஹிட் அடித்தவர்கள் இருவரும்.
தற்போது இருவருமே தங்களது சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தில் உள்ளனர். அடுத்ததாக சிவாகார்த்திகேயன்-சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் சிவாவுக்கு ஜோடியாக சூரி இருக்கிறார்.
இது குறித்து சமீபத்திய பட ப்ரோமோசனில் சிவாகார்த்திகேயனிடம் கேட்ட போது, அவர் கூறியாதவது
சிவாவும் – சூரியும் நடித்துக்கொண்டிருந்த போது பார்த்துக்கொண்டே இருந்துள்ளார் சமந்தா, இருவருக்கும் செம்ம கெமிஸ்டிரி உள்ளது. படத்திற்கு இருவருமே போதும் அவர்களுக்குள் நல்ல கெமிஸ்டிரி இருக்கும் போது நான் எதற்கு இங்கு, எனக் கூறி சமந்தா கடுப்பாகி விட்டாராம் செல்லமாக.
சிவாவின் வேலைக்காரன் படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. தற்போது படத்திற்கான ப்ரோமோசன் வேலைகள் நடந்த வருகிறது. இந்த படமும் வழக்கமான சிவாகாரத்தி படங்களை போலவே கமர்சியல் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.