நடிகை சமந்தாவிற்கு அடிபட்டு காயம் ஏற்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பழமொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் போட்டிருக்கும் போஸ்ட் தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சமீபத்தில் நடிகை சமந்தா அவர்கள் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து இருந்தார். அந்த படப்பிடிப்பில் அவருக்கு தவறுதலாக காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சமந்தாவிற்கு ஏற்பட்ட காயம்:
அந்த காயத்தால் அவருடைய காலின் முட்டியில் அடிபட்டு இருக்கிறது. இது தொடர்பாக தான் அவர் சோசியல் மீடியாவில் புகைப்படத்தை பதிவிட்டு, காயங்கள் இல்லாமல் என்னால் ஆக்சன் ஸ்டாராக மாற முடியாதா? என்று கூறி இருக்கிறார். அதோடு இது எந்த படத்தின் படப்பிப்பு தளத்தில் நடந்து என்று தெரியவில்லை. இதை பார்த்த ரசிகர்கள், நீங்கள் சீக்கிரமாகவே குணமடைந்து வாருங்கள் என்று அவருக்கு ஆறுதலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
சமந்தா திருமணம்:
இதனிடையே நடிகர் சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தெனிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2011 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
சமந்தா- நாக சைதன்யா பிரிவு:
மேலும், இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை. பிரிவிற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
சமந்தா குறித்த தகவல்:
இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இதனால் இவர் ஒரு வருடமாகவே சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். சமீபத்தில் தான் இவர் பூரணம் குணமாகி வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, சோபிததாவுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.