‘ஒட்டு உறவே வேண்டாம்’ – திருமண நினைவாக இருந்த முக்கிய பொருளையே நாக சைதன்யா அம்மாவிடம் திருப்பி கொடுத்த சமந்தா.

0
973
samantha
- Advertisement -

நடிகை சமந்தாவின் சமீபத்திய செயல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

- Advertisement -

விவாகரத்துக்கு பின் சமந்தா :

பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். தற்போது நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார். விவாகரத்துக்கு பின்னர் அடிக்கடி விவாகரத்து பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சமந்தா.

மன அழுத்தத்தில் சமந்தா :

சமீபத்தில் சமந்தா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அதில் அவர் கூறியது, உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களோடு உரையாடுங்கள். அப்போது தான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இயல்பாக வாழ முடியும். எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் மன நிலையில் இருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தது என்னுடைய நண்பர்கள் தான். அவர்கள் துணையில் தான் நான் அதிலிருந்து விடுபட்டேன்.

-விளம்பரம்-

திருமண புடவையை திருப்பி கொடுத்த சமந்தா ;

அதோடு நான் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறதுக்கும் அவர்கள் தான் காரணம் என்று பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமந்தா தான் திருமணத்தின் போது கட்டி இருந்த புடவையை நாக சைதன்யாவின் அம்மாவிடம் திருப்பி கொடுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் நாக சைதன்யாவிற்கும் தனக்கும் ஒட்டு உறவே இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் சமந்தா.

இனி சேர்நது வாழ வாய்ப்பில்லை :

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் விவாகரத்து பற்றிய அறிவிப்பை நீக்கி இருந்தார். . இதனை அடுத்து அவர் மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைவாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர். ஆனால் அதே நேரத்தில் சமந்தாவை பிரிவதாக நாக சைதன்யா அறிவித்த அறிவிப்பு இன்னும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. ஆனால், சமந்தாவின் இந்த செயல் மூலம் இனி அவர் கணவருடன் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது.

Advertisement