தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என்று தென்னிந்திய சினிமாவில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சமந்தா தற்போது ஓ பேபி என்ற படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாக தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் சமந்தா.
இதையும் பாருங்க : வனிதாவை தட்டி கேட்க தர்சனை தவிர வேறு யாருக்கும் தைரியம் இல்லையா.!
அந்த புகைப்படத்தில் ஒரு வெள்ளை நிற ஜாக்கட் மற்றும் பாவாடையை அணிந்திருந்தார் சமந்தா. அந்த புகைப்படத்தில் அவர் மேலே அணிந்திருக்கும் ஆடை சிறிது விலகியபடி இருக்க அதில் ஒரு டாட்டூ மட்டும் லேசாக வெளியில் தெரிந்துள்ளது.
அந்த டாட்டூ குறித்து குறிப்பிட்டுள்ள சமந்தா, என் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுநாள் வரை நான் மறைத்து வைத்த டாட்டூ, கடைசியாக வெளியில், நாக சைதன்யா, என் கணவர், என் உலகம் என பதிவிட்டுள்ளார்.
சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவருமே தங்களது வலது கையில் மேல்நோக்கி எழும் இரண்டு குறியீடுகளை டாட்டூவாக குத்திகொண்டுள்ளனர். அதற்கு அர்த்தம் என்னவெனில் ‘தம்பதிகள்’ என்று அர்த்தமாம். ஆனால், இந்த டாட்டூ நாகசைதன்யாவின் கையெழுத்து என்று பலர் கூறி வருகின்றனர்.