யோகா போஸை கண்ட மேனிக்கு மீம் போட்டு தள்ளிய நெட்டிசன்கள் – சமந்தாவின் ரியாக்ஷன்.

0
1062
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பட்டைய கிளப்புகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அம்மணிக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு வரவில்லை.

இதையும் பாருங்க : பாத்ரூமில் ஸ்ட்ராப்லெஸ் உடையில் வளைத்து வளைத்து செல்ஃபி – அனு இம்மானுவேல் அட்ராசிட்டி.

- Advertisement -

இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள். இது ஒருபுறம் இருக்க அம்மணி தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க யோகா சனம், உடற் பயிற்சி என்று தினமும் செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா இரண்டு கைகளை மட்டும் பயன்படுத்தி பாக்காசனம் போன்ற ஒரு யோகா போஸை கொடுத்து அசத்திஇருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில் இந்த புகைப்படத்தை வைத்து மீம் கிரியேட்டர்கள் பல விதமான மீம்களை உருவாக்கினர். அதனை சமந்தவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சிரித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement