12 வருட சினிமா பயணம் குறித்து ஸ்பெசல் பதிவை போட்ட சமந்தா – அவரின் முதல் படம் எது தெரியும் இல்ல ?

0
468
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்குப் பிறகு விளம்பரங்கள், தனியார் நிகழ்ச்சிகள் என சமந்தா பணியாற்றி வந்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சமந்தா சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார். மேலும், திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருக்கிறோம் என்று சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு முழுவதும் இது குறித்து தான் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமந்தா நடிக்கும் படங்கள்:

இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சாகுந்தலம், யசோதா ஆகிய பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார்.

சமந்தா பதிவிட்ட ஸ்பெஷலான பதிவு:

இப்படி சமந்தா அவர்கள் பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். இருந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இந்நிலையில் சமந்தா ஒரு ஸ்பெஷலான பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் சினிமா உலகில் நுழைந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பயணம் மற்றும் உலகின் சிறந்த, விசுவாசமான ரசிகர்களைப் பெற்றதற்காக நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்! என்று தன்னுடைய மகிழ்ச்சியை சமந்தா வெளிப்படுத்தி உள்ளார்.

-விளம்பரம்-

சமந்தா நடித்த முதல் படம்:

அதாவது சமந்தா அவர்கள் சினிமா துறையில் நுழைந்து 12 வருடம் ஆகி விட்டதாம். சமந்தா அவர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். படத்தின் கடைசியில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சமந்தா வருவார். அதாவது அந்த படத்தில் சிம்பு ஒரு படம் எடுப்பார். அதில் திரிஷாவின் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் சமந்தா தான் நடித்திருப்பார்.

கதாநாயகியாக சமந்தா நடித்த முதல் படம்:

இது தான் சமந்தா நடித்த முதல் படம். அதன் பின்னர் தான் இந்த படம் தெலுங்கில் Ye Maaya Chesave ஏமாளி என்ற பெயரில் அதே ஆண்டு ரீமேக் ஆனது. அந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இது கதாநாயகியாக நடித்த சமந்தாவின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் வெளிவந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை கொண்டாடும் விதமாக சமந்தா சோஷியல் மீடியாவில் ஸ்பெஷலான நாள் என்று பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து லைக்ஸ்குகளைக் குவித்து வருகிறார்கள்.

Advertisement