விவாரகத்துக்கு பின் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா தற்போது ஆன்மீக சுற்றுப்பயணத்தை துவங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். மேலும், சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருமணத்திற்கு பிறகும் சமந்தா அவர்கள் படம், வெப்சீரிஸ் என்று பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார். இதனிடையே சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பாடு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது.
இது வதந்தியாக முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று இவர்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று அதிகார பூர்வமாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.மேலும், இதற்கு சமந்தாவை குற்றம்சாட்டி பல செய்திகள் இணையத்தில் வலம் வந்தது. இந்நிலையில் இது குறித்து சமந்தா அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் எந்தவிதமான எதிர்மறை விஷயங்களும் என்னை பாதிக்காது என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதோடு தன்னை பற்றி தவறான செய்திகளை பரப்பிய சுமன் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரத்துக்கு பின்னர் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா தற்போது , மன அழுத்தத்தை போக்க, நடிகை சமந்தா தனது தோழியுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். இருவரும் ஒன்றாக செல்வதை உறுதி செய்யும் வகையில் ஷில்பா ரெட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் தனி ஹெலிகாப்டர் முன் சமந்தா, ஷில்பா ரெட்டி நிற்கின்றனர்.