அடுத்தடுத்த படங்களில் குத்தாட்ட பாடலுக்கு கமிட்டான சமந்தா- அடுத்து இவர் கூட தானா?

0
434
samantha
- Advertisement -

மீண்டும் மீண்டும் குத்தாட்ட பாடலுக்கு கமிட்டாகும் சமந்தாவின் படம் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். அதிலும் சமீப காலமாகவே சமந்தா படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் சூப்பர் ஜோடிகளாக திகழ்வார்கள் என்று கருதப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

-விளம்பரம்-

மேலும், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கருத்து பதிவிட்டு இருந்தார்கள். இருந்தாலும் பிரிவிற்கு பின் நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் சமந்தா அவர்கள் ‘ஊ சொல்லிறியா மாமா’ என்ற பாடலுக்கு பயங்கரமாக நடனம் ஆடி இருந்தார். மிக பெரிய அளவில் இந்த பாடல் ஹிட் ஆனது.

- Advertisement -

சமந்தாவின் ‘ஊ சொல்லிறியா மாமா’ பாடல்:

அதோடு இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக இந்தப் பாடல் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. இந்தப் பாடலுக்கு பல சர்ச்சைகள் வந்தாலும் யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி கொண்டாடப்பட்டு ஹிட்டானது. இதனை தொடர்ந்து தற்போது சமந்தா பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சமந்தா அப்பப்போ வெளிநாட்டு பயணங்களிலும் சென்று கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடுவது போல வெளிவந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

மீண்டும் குத்தாட்டம் பாடலுக்கு கமிட்டான சமந்தா:

அதுமட்டுமில்லாமல் ஊ சொல்றியா பாடலுக்கு பிறகு சமந்தா உடைய எல்லா டீவ்ட்களும், புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் ஒரு உலா வருகின்றது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் படத்தை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா படத்துக்கு நடனம் ஆட சமந்தா கமிட் ஆகி உள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது விஜய் தேவர்கொண்டா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் லிகர். இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. மேலும், இந்த படமானது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது.

-விளம்பரம்-

லிகர் படம் விவரம்:

மேலும், இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்கிற்கு வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தான் சமந்தா குத்தாட்டம் போட இருக்கிறார். சமந்தா- விஜய் தேவர்கொண்டாவின் குத்துப்பாடலுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டும் இல்லாமல் சமந்தா ஹாலிவுட்டிலும் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜானுடன் இணைந்து ‘Arrangements of Love’ என்ற படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமந்தா நடித்து வரும் படங்கள்:

பின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாந்தரூபன் என்பவரின் இயக்கத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியில் சில படத்தில் சமந்தா ஒப்பந்தம் செய்து உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு ஸ்ரீதேவி மூவீஸ் தயாரிப்பில் ஹரிசங்கர் – ஹரிஷ் நாராயணன் இயக்கும் புதிய படம் ஒன்றிலும் சமந்தா கமிட் ஆகி இருக்கிறார். இதுவும் தமிழ் மற்றும் தெலுங்கில் இருக்கிறார். மேலும், காத்துவாக்குல 2 காதல், சாகுந்தலம் என பல படங்களில் சமந்தா பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement