படுமோசமான புகைப்படத்தை பதிவிட்ட சமந்தா.! அட்வைஸ் செய்த ரசிகர்களை இப்படியா கேவலப்படுத்துவது.!

0
2936
- Advertisement -

தென்னிந்திய நடிகையான சமந்தா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த சில காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா, தற்போது ஒ பேபி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா திருமணத்திற்கு பின்னரும் எந்தவிதத் தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மோசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்க : மெட்ராஸ் பட நடிகர் கலையரசனுக்கு இவ்வளவு பெரிய மகளா.! புகைப்படம் இதோ.!

- Advertisement -

இந்த புகைப்படத்தை கண்ட பெரும்பாலான சமந்தாவின் ரசிகர்கள் தயவு செய்து இப்படி எல்லாம் புகைப்படங்களை பதிவிடாதீர்கள் என்று மிகவும் அக்கறையுடன் கூறினார்கள். மேலும், ஒரு சிலரோ உங்களை எனக்கு பிடிக்காத தான் இருந்தாலும் இது சமூக வலைதளம் என்பதை மனதில் கொண்டு கொஞ்சம் அக்கறையுடன் பதிவிடுங்கள் என்று மிகவும் பொறுமையாகவே சமந்தாவின் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்திருந்தனர்.

ஆனால், மற்ற நடிகைகளை போல இது என்னுடைய வாழ்க்கை திருமணத்திற்குப் பின்னர் நான் எப்படி வாழவேண்டும் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதோடு, ஆங்கிலத்தில் மிகவும் மோசமான வார்த்தையை குறிப்பிடும் விரலையும் காட்டி பதிவிட்டுள்ளார். இதனால் அட்வைஸ் செய்த ரசிகர்களையே சமந்தா எப்படி கேவலப்படுத்தியுள்ளார் என்று பலரும் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement