விவாரத்துக்கு பின் பல பதிவுகளை போட்டு வந்த சமந்தா, ஆனால், நாக சைதன்யா போட்ட முதல் பதிவை பாருங்க.

0
610
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களாக திகழ்பவர்கள் சமந்தா, நாக சைதன்யா ஆவர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். பின் சினிமா உலகில் மிக சிறந்த ஜோடி என்றால் சமந்தா-நாகசைதன்யா தான் என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் திகழ்ந்து இருந்தார்கள். சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக தங்கள் சமூக வலைதளத்தில் இருவருமே அறிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

மேலும், நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரிவிற்கு பிறகு இருவரும் நண்பர்களாக தொடருவோம் என்றும் அறிவித்திருந்தார்கள். சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் இவர்களுடைய விவாகரத்து குறித்து தான் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்ததால் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மிக சுற்றுலா சென்று இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : சங்கவி முதல் சமந்தா வரை விஜய் லிப் கிஸ் கொடுத்த டாப் ஏழு நடிகைகள் – இதோ புகைப்படங்கள்.

- Advertisement -

சுற்றுலா மற்றும் பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் என பல படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதேபோல் பங்கர் ராஜு, தேங்க் யூ என பல படங்களில் நாக சைதன்யா கமிட் ஆகி இருக்கிறார். அதோடு இவர் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெப்சீரிஸ்ஸில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமந்தா உடன் பிரிவுக்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் முதன் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கிரீன் லைட் என்ற புத்தகத்தை பகிர்ந்து கூறி இருப்பது, வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம். உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ என்று கூறி இருக்கிறார். இவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement