கட்டிலுக்கு அலேக்காக தூக்கி செல்லும் கணவர் – சமையல் மந்திரம் கிரிஜா நடத்திய செம ரொமான்டிக் போட்டோ ஷூட்.

0
1916
girja
- Advertisement -

சினிமாவை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் அதிக இடம் பிடித்து வருகிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து மக்கள் அனைவரும் சின்னத்திரையை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், சினிமாவை விட டிவி நிகழ்ச்சிகள் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் இரவு 10 மணிக்கு மேல் வரும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கிரிஜா. அந்தரங்க நிகழ்ச்சியில் டாக்டர்களுடன் பல இளைஞர்களும், கணவன்மார்களும் கேட்கும் அந்தரங்க கேள்விகளை சற்றும் முகம் சுளிக்காமல் கேட்டு அதற்கு டாக்டரிடம் விளக்கத்தை கேட்டு இளசுகள் மத்தியில் பிரபலமானவர் தான் அந்தரங்கம் நிகழ்ச்சி புகழ் கிரிஜா.

-விளம்பரம்-

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவரது பூர்வீகம் சென்னை தான். சிறு வயதில் தோல் சம்பந்தமான படிப்பு படிக்கணும்னு என்று ஆசை பட்டார். ஆனால், பண பிரச்சனையால் அது நினைவேறாமல் போனது. பின்னர் இவர் டிவி ஸ்க்ராலிங்கில் வந்ததை பார்த்து ஆடிஷன் அட்டண்ட் செய்து பின்னர் தான் சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பின்னர் இவர் மும்பைக்கு சென்று தனது படிப்பையும் தொடர்ந்து உள்ளார்.

- Advertisement -

சமையல் மந்திரம்ம் ஹலோ டாக்டர் :

அதனை தொடர்ந்து பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்கள் நண்பன், சமையல் மந்திரம், அந்தரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் கிரிஜா. இதனால் இவர் நிறைய எதிர்ப்புகளை சந்தித்தார். இருந்தாலும் எல்லாம் தாண்டி இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி இருந்தார். மேலும், இவரை விமர்சித்தவருக்கு பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

படங்களில் கிடைத்த வாய்ப்பு :

அதில் அவர் கூறி இருந்தது, இந்த நிகழ்ச்சி ஒரு மருத்துவ நிகழ்ச்சி என்பதை மனதில் கொண்டு தான் நான் தொகுத்து வழங்கினேன். அதில் நடக்கும் உரையாடலை பார்த்து என்னை விமர்சனம் செய்ய வேண்டாம். இந்த நிகழ்ச்சியில் இருந்து பல இளைஞர்கள் தவறான பாதையில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள். அதோடு பல பெண்கள் தாய்மை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள் என்பதை சொல்வதில் பெருமையுடன் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். மேலும், இவர் டிவியில் பணியாற்றிய போதே பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

லாக்டவுனில் திருமணம் :

ஆனால், வந்த வாய்ப்பு எல்லாம் கிளாமர் ரோல் என்பதால் அதனை தவிர்த்துவிட்டாராம். பின் சமீப காலமாக இவர் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவது இல்லை. இதனிடையே கிரிஜா தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இதனால் இவர் அடிக்கடி மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடித்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வந்தார்.

கணவருடன் கட்டில் போட்டோ ஷூட் :

இதனால் இவரை சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பேர் பாலோவ் செய்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் கிரிஜா தன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் விமர்சித்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

Advertisement