வில் ஸ்மித் மனைவிக்கு இருந்த குறைபாடு சமீரா ரெட்டிக்கும் இருந்ததாம் – அவரே பகிர்ந்த ஷாக்கிங் உண்மை.

0
251
sameera
- Advertisement -

வில் ஸ்மித் மனைவிக்கு இருக்கும் அலோபீசியா என்ற ஒரு நோய் பாதிப்பு எனக்கும் இருக்கிறது என்று நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் 94 வது ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்படம், திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம், நடிகர், ஆடை வடிவமைப்பு, எடிட்டிங், சிறந்த விஷுவல் எஃபக்ட் என பல பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த விருதிற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் பலத்த போட்டியில் இருந்தார்கள். ஹாலிவுட்டின் தலைசிறந்த பல படங்கள் இந்த முறை பல பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு கடும் போட்டிகளை கொடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் பெற்று இருக்கிறார். முதன் முறையாக ஆஸ்கர் விருது வாங்கியதால் மிகுந்த உற்சாகத்துடன் வில் ஸ்மித் மேடையில் உரையாற்றும்போது கண்ணீர் சிந்தினார். இந்த விருது கிடைக்க உதவியாக இருந்த படத்தின் தயாரிப்பாளர்களான செரினா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோருக்கு மேடையில் நன்றி தெரிவித்தார்.

- Advertisement -

ஆஸ்கர் விருது வென்ற நடிகர் வில் ஸ்மித்:

முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்ற நடிகர் வில் ஸ்மித் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. நடிகர் வில் ஸ்மித் நடித்த கிங் ரிச்சர்டு திரைப்படம் ஒரு பயோபிக் படம். இது புகழ்பெற்ற டென்னிஸ் பயிற்சியாளர் ரிச்சர்ட் வில்லியம்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் விழா மேடையில் கிரஸ் ராக் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று மேடையேறிய நடிகர் வில் ஸ்மித் அவரை பளார் என கன்னத்தில் அறைந்து இருக்கிறார்.

வில் ஸ்மித்தின் மனைவியை கிண்டல் செய்த காரணம்:

ஏன்னா, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட் மொட்டை தலை குறித்து ராக் கிண்டலாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடையிலேயே ராக்கை அடித்துள்ளார். பின் என் மனைவி குறித்து உன் வாயிலுருந்து இனி வார்த்தைகள் வரக்கூடாது என்று கோபமாக பேசி இருக்கிறார். இந்த சம்பவம் ஆஸ்கர் விழா மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், வில் ஸ்மித் மனைவி ஜடா பின்கெட் முடி உதிர்ததால் தான் மொட்டை அடித்து இருக்கிறார். இதற்குக் காரணம் அலோபேசியா என்ற நோய் தோற்று தான்.

-விளம்பரம்-

வில் ஸ்மித்தின் மனைவிக்கு இருக்கும் நோய்:

இதனால் தான் ஜடா பின்கெட் மொட்டை அடித்திருக்கிறார். இந்த நிலையில் தனக்கும் ஸ்மித் மனைவிக்கு இருக்கும் Alopecia areata நோய் தொற்று இருப்பதாக நடிகை சமீரா ரெட்டி கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமீரா ரெட்டி கூறியது, 2016ல் எனக்கும் அலோபீசியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் என் தலையில் முடி உதிர்ந்து மூன்று இடங்களில் வழுக்கை போன்று இருப்பதை பார்த்தேன். உண்மையில் அதனை சமாளிக்க மிகவும் கடினமாக இருந்தது. Alopecia areata தொற்று வந்தால் அது உங்களை நோயுற செய்யாது.

சமீரா பதிவிட்ட பதிவு:

மேலும், இந்த தொற்று நோயாகவும் இல்லை. ஆனாலும், அதை ஏற்றுக்கொள்வது உணர்வுரீதியாக முடியாத ஒன்றாக இருந்தது. இதற்கு சிகிச்சை இருக்கிறது. இந்த சிகிச்சையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முடி வளரக் கூடும் என்பதை மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள். ஒரு நபருக்கு Alopecia areata வருவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. இப்போது நான் ஆரோக்கியமான கூந்தலை கொண்டிருந்தாலும் என் வாழ்வில் எந்த நேரத்திலும் அது மீண்டும் வரக்கூடும் என்பதை அறிந்து வைத்துள்ளேன் என்று கூறியிருக்கிறார். இப்படி சமீரா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement