கேவலமா இல்ல, நம்முடைய கோமாதாவை சாப்பிடுவீர்களா ? சமீராவின் வீடியோவில் திட்டிய நபர். அதற்கு அவர் கொடுத்த பதிலடி.

0
688
sameera
- Advertisement -

‘மாட்டு கறி உண்டதாக விமர்சனம் செய்தவர்களுக்கு சீரியல் நடிகை சமீரா கொடுத்த பதிலடி பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சமீரா. இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் நடித்த சீரியலில் அன்வரின் அம்மாவும் இருந்தார். அப்போது இருந்தே அன்வரின் அம்மாவுக்கும், சமீராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின் குடும்ப நண்பர்களாக இருந்தவர்கள் சில காலங்களுக்குப் பிறகு குடும்ப உறவினர்கள் ஆகவே மாறிவிட்டார்கள்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பகல் நிலவு என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார் சமீரா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் அன்வர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். மேலும், இந்த சீரியலுக்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான றெக்க கட்டி பறக்குது மனசு என்ற தொடரில் சமீரா நடித்தார். அதோடு இந்த சீரியலை அன்வர்-சமீரா இருவரும் சேர்ந்து தயாரித்தார்கள்.

- Advertisement -

அன்வர்– சமீரா திருமணம்:

இந்த இரு சீரியல்களுக்கு பிறகு அன்வர்– சமீரா ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார்கள். பின் சில வாரங்களில் இவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதற்கு பின் சமீரா கர்ப்பமாக இருக்கும் தகவலை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சமீரா எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

அன்வர்– சமீரா குழந்தை புகைப்படம்:

அதனால் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோ என அனைத்தையும் பதிவிட்டு வருவார். அது மட்டுமில்லாமல் தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சமூக வலைத்தளத்தில் பதில் கொடுத்து வருவார். கடந்த ஆண்டு தான் சமீராவுக்கு குழந்தை பிறந்தது. அது குறித்து சமீராவே சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். பின் சமீரா- அன்வர் இருவரும் தங்கள் குழந்தையுடன் ஒதுக்கும் நேரத்தை வீடியோவாகவும், புகைப்படங்களாவும் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

சமீரா பதிவிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பயனர்:

அந்த வகையில் சமீபத்தில் சமீரா தன் குழந்தையை கையில் வைத்து கொண்டு புஸ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா ஆடிய வாய்யா சாமி பாடலுக்கு நாடனம் ஆடி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமீரா, தன் மாமியாரின் யூடுயூப் பக்கத்தின் சமையல் வீடியோ ஒன்றில் பங்கேற்று இருந்தார். அதில் மாட்டு கறி பிரியாணி சமைத்து அதை ருசி பார்த்து மிகவும் அருமையாக உள்ளது என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதற்கு பல தரப்பில் இருந்து பல விதமான கமெண்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் ‘மாடு நல்லா இருக்கா சமீரா ? நம் கோமாதா கடவுளை உண்பதற்க்கு நீ வெட்கப்பட வேண்டும்.

விளக்கம் கொடுத்து உள்ள சமீரா:

உன்னுடைய வார்த்தைகளும் உன்னுடைய வாழ்க்கை முறையும் வெறுக்கிறேன். மாட்டை சாப்பிட வேண்டாம் அது நம் கடவுள்’ என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த சமீரா, இது உங்களின் மன நிலையை குறிக்கிறது. நானும் மாட்டு கறிக்கு எதிரானவள் தான். நான் மாடு ருசியாக இருக்கிறது என்று சொல்லவே இல்ல. இஸ்லாமியர்கள் மாட்டு கறி சாப்பிடுவார்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்கிறது. அப்படியே யாராவது சாப்பிட்டாலும் அது அசிங்கம் என்று நீங்கள் சொல்லக்கூடாது. விலங்குகளை உண்பது தவறு என்றால் செடி, கொடிகளும் உயிரினங்கள் தானே. அது சாப்பிட்டாலும் தவறு தான்.

வைரலாகும் சமீரா வீடியோ:

எது எப்படியோ மாட்டு கறி சாப்பிடுவதால் என்னுடைய வாழ்வு முறை சரியில்லை என்பதை எப்படி நீங்கள் சொல்லலாம். நான் பல முறை சொல்லி இருக்கிறேன் நான் சிக்கன் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று. நான் அப்படி சொன்னதற்கு காரணம் ஹைதராபாத் உருத்தில் ஒரு கறி நல்ல கறியா இல்லை கெட்ட கறியா என்று சொல்வதாக அர்த்தம். ஒருவரை அவ்வளவு எளிதாக எடைபோட்டுவிட வேண்டாம்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார். இப்படி இவரின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement