தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சமுத்திரகனி – அவருடைய மகள் எப்படி வளந்துட்டார் பாருங்க.

0
1316
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘உன்னைச் சரணடைந்தேன்’. இது தான் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து ‘புரட்சி கலைஞர்’ விஜய காந்தின் ‘நெறஞ்ச மனசு’, எம்.சசிக்குமாரின் ‘நாடோடிகள் 1 & 2, போராளி’, ‘ஜெயம்’ ரவியின் ‘நிமிர்ந்து நில்’ போன்ற சில படங்களை இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி.

-விளம்பரம்-

முத்திரக்கனி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘ரைட்டர்’. இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இவருடைய மகன் இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. சமுத்திரகனியின் மகன் ஹரி விக்னேஸ்வரன். இவர் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி, நடித்து உள்ளார். ‘அறியா திசைகள்’ என்று குறும்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த குறும்படம் 40 நிமிடங்கள் கால அளவைக் கொண்டுள்ளது.

- Advertisement -

சமுத்திரகனி மகன் :

மேலும், இக்குறும்படம் குறித்து சமுத்திரகனியின் மகனும், இயக்குனருமான ஹரி விக்னேஸ்வரன் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்பதே இந்த குறும்படத்தின் கதை என்று கூறி இருக்கிறார். மேலும், மிக அற்புதமாகவும், திறமையாகவும் ஹரி விக்னேஸ்வரன் கதையை எழுதி இருக்கிறார்.

அப்பாவை போல மகன் :

அதுமட்டுமில்லாமல் இவருடைய கதைக்கு இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது. மேலும், அறியா திசைகள் குறும்படம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இதனால் ஹரி விக்னேஸ்வரன் தனது அப்பா சமுத்திரக்கனியை போலவே சினிமா துறையில் சாதிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும், தற்போது சமுத்திரக்கனி பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமௌலி அவர்கள் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'(RRR) என்ற படத்தை இயக்கிஇருந்தார். இந்த படத்தில் ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்துஇருந்தனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகசூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சமுத்திரக்கனி மகள் :

அதே போல சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுகொண்டு இருக்கும் துணிவு படத்திலும் சமுத்திரகனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு சமுத்திரகனி தன்னுடைய குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களில் சமுத்திரகனியின் மகளை பார்த்து பலரும் வியந்து போய்யுள்ளனர்.

Advertisement