சமுத்திரகனியின் சொந்த ஊர், பூர்வீக வீட்டில் வாழ்ந்து வரும் அவரது தாயார் மற்றும் தங்கை கணவரின் பேட்டி.

0
1194
Samuthirakani
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை தற்போது இருக்கும் இயக்குனர், நடிகர்கள் என்று பலர் ஆரம்ப காலத்தில் துணை நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் இருந்து வந்தர்வகள் தான். அதே போல தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் நடிகர்களாகவும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சமுத்திரகனியும் ஒருவர். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘உன்னைச் சரணடைந்தேன்’.

-விளம்பரம்-

சமுத்திரனி இயக்கிய முதல் படம் :

இது தான் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதில் கதையின் மிக முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண், மீரா வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து ‘புரட்சி கலைஞர்’ விஜய காந்தின் ‘நெறஞ்ச மனசு’, எம்.சசிக்குமாரின் ‘நாடோடிகள் 1 & 2, போராளி’, ‘ஜெயம்’ ரவியின் ‘நிமிர்ந்து நில்’ போன்ற சில படங்களை இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி.

- Advertisement -

நடிகர் சமுத்திரகனி :

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார்.ஒரு இயக்குநராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த சமுத்திரக்கனி, அடுத்ததாக நடிகராக களமிறங்க முடிவெடுத்தார். அதன் பிறகு ‘சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை, நீர்ப் பறவை, வேலையில்லா பட்டதாரி என்று பல படங்களில் நடித்தார் சமுத்திரகனி.

சமுத்திரகனி நடித்த சீரியல்கள் :

ஆனால், இவரை ஒரு நடிகராக அறிமுகம் செய்தது கே பாலச்சந்தர் தான்.சமுத்திரக்கனி இயக்குநர் ஆவதற்கு முன்பு பாலச்சந்தர் இயக்கிய சில டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘ஜன்னல் – சில நிஜங்கள் சில நியாயங்கள்’, பொதிகை டிவியில் ஒளிபரப்பான ‘கடவுளுக்கு கோபம் வந்தது’, ராஜ் டிவியில் ஒளிபரப்பான ‘மர்ம தேசம், ரமணி vs ரமணி பார்ட் 2’ போன்ற டிவி சீரியல்களில் நடித்திருந்தார் சமுத்திரக்கனி.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்பு கொடுத்த பாலச்சந்தரின் :

தொடர்ந்து பாலச்சந்தரின் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தார் சமுத்திரக்கனி. ஒருகட்டத்தில் பாலச்சந்தர் அவர்கள் ‘நீ சினிமாவில் நடிக்க முதலில் ஆசைப்பட்டாய் சரி, நானே உன்னை முதலில் திரைப்படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று 2001ஆம் ஆண்டு அவர் இயக்கிய ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் சமுத்திரகனியை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

சமுத்திரகனி நடித்த முதல் படம் :

மாதவன், சினேகா, சிம்ரன், விவேக், வாலி என்று பலர் நடித்த இந்த படத்தில் சமுத்திரகனி, மருத்துவராக இருக்கும் விவேக்கிடம் இடுப்பு வலிக்கு சிகிச்சை எடுக்க வரும் ஒரு நோயாளியாக ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார். இந்த படத்திற்கு பின்னர் சமுத்திரகனி, நெறஞ்ச மனசு, பொய், பருத்திவீரன் போன்ற படங்களில் சிறு சிறு காட்சியில் தலைகாண்பித்து இருப்பார். அதன் பின்னரே சுப்ரமணியபுறம் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement