எப்படி இருக்கிறது ரஞ்சித் தயாரித்துள்ள சமுத்திரகனியின் ‘ரைட்டர்’ – முழு விமர்சனம் இதோ

0
1160
writter
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்பவர் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘ரைட்டர்’. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி உடன் ஹரி, இனியா, மகேஸ்வரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பிராங்கிளின் ஜேக்கப் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை பா ரஞ்சித் தயாரித்திருக்கிறார். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ‘ரைட்டர்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம் :

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் காவல்துறை சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக 2021 ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரம், அதிகாரத்திற்குள் இருக்கும் பல பிரச்சனைகளை மையமாக வைத்து தமிழ் சினிமா மிக அற்புதமாக படங்களை தந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் படம் தான் ‘ரைட்டர்’ . இந்திய சினிமாவின் ஒரு நோட்வர்த்தி படமாகத்தான் ‘ரைட்டர்’ படம் பார்க்கப்படுகிறது. ஜாதி, மத ரீதியான பிரச்சனை, அடித்தட்டு மக்களின் போராட்டம், விளிம்பு நிலையில் வாழும் மக்களின் பிரச்சனைகள், ஏக்கங்கள் போன்ற பல காட்சிகளை பா ரஞ்சித் தன்னுடைய படங்களில் காண்பித்திருக்கிறார்.

- Advertisement -

சமூக கருத்தை சொல்லும் படம் :

இருந்தாலும் கூட சமூகத்திற்கு சொல்ல வேண்டிய முக்கியமான கருத்துக்களையும் பொறுப்புகளையும் சிறப்பாக ‘ரைட்டர்’ படத்தில் சொல்லியிருக்கிறார். ‘ரைட்டர்’ தங்கராஜ் என்ற கதாபத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். படத்தில் நீண்ட காலமாக ஒரு காவல் நிலையத்தில் ரைடர் ஆக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் இருக்கும் குடும்ப சிக்கல்கள் என்று அவருடைய வாழ்க்கை நகர்கிறது. பின் அவர் ரிட்டயர்மென்ட் ஆகும் நேரம் வருகிறது. இருந்தாலும் அதை சமாளித்து தன் கடைமைகளையும் நேர்த்தியாக சமுத்திரக்கனி செய்து வருகிறார்.

படத்தின் முதல் பாதி :

படத்தில் சமுத்திரக்கனி அவர்கள் 58 வயது சீனியர் அதிகாரியாக தொந்தியும் தொப்பையுமாக படம் முழுவதும் கலக்கியிருக்கிறார் . ஒரு ‘ரைட்டர்’ வாழ்வில் ஏற்படும் இன்னல்களை மையமாக கொண்டு கதை நகர்கிறது. ‘ரைட்டர்’ படத்தின் முதல் பாதியில் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் புதிராக படம் செல்கிறது. பின் இரண்டாம் பாதியில் பல புதிர்களுக்கு விடை அளிக்கும் வகையில் இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

-விளம்பரம்-

இரண்டாம் பாதி :

அதோடு முதல் பாதி கொஞ்சம் சலிப்படைய செய்திருந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாக சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் அண்ணன் –தம்பி பாசம், அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் வலியும் வேதனையும் என்று சொல்லப்படும் காட்சிகள் எல்லாம் நம்மை உறைய வைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் தியேட்டரிலேயே பலபேர் கண்களில் கண்ணீர் சிந்தவைத்து இருக்கிறது.

நடிகர்களின் டெடிகேஷன் :

அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக காட்சிகளை இயக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் நடிகை இனியா அற்புதமாக நடித்திருக்கிறார். இவர் படத்தில் குதிரை ஓட்டுவது, குதிரையை அடக்க முயற்சி செய்வது என அருமையாக அமைந்திருக்கிறது. படத்தில் கேமரா ஒர்க், இசை, எடிட்டிங் அனைத்தும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. கோவிந்தாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகளின் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது என்பதை ஆழமாகச சிந்திக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு சங்கம் கண்டிப்பாக வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார் இயக்குனர்.

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

சமுத்திரகனியின் நடிப்பு வேற லெவல்.

படத்திற்கு இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாக சென்று இருக்கிறது.

இயக்குனர் கையாண்ட திரைக்கதை அற்புதமாக அமைந்திருக்கிறது.

குறைகள் :

இரண்டாம் பாதி அளவுக்கு இல்லாமல் முதல் பாதி சற்று சலிப்படைய செய்திருக்கிறது.

முதல் பாதியில் கொஞ்சம் தொய்வு இல்லாமல் எடுத்து சென்றிருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்.

இறுதி அலசல் :

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும், வாழ்க்கையில் ஜெயித்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற சிந்தனையும் அற்புதமாக காண்பித்து அம்பேத்கர் புகைப்படத்துடன் கடைசி காட்சியை முடித்திருக்கும் விதம் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. காவல்துறை அதிகாரிகளின் உணர்வுகளையும் அவர்களது அடிப்படை உரிமைகளையும் சொல்லும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்க்கும் படமாகவும், இன்றைய சமுதாயம் பார்க்க வேண்டிய படமாக ரைடர் அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘ரைட்டர்’ — காவல்துறை அதிகாரிகளுக்கு வெற்றி.

Advertisement