வெறும் கெஸ்ட் ரோலுக்கு 2 கோடி சம்பளம் – வேண்டாம் என்று கூறியும் கொடுத்துள்ள இயக்குனர்.

0
1912
samuthrakani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியில் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுத்து வருகிறார் சமுத்திரகனி. இவரது படங்கள் எப்போதும் சமூகத்திற்கு கருத்து சொல்லும் வகையில் இருக்கும். இந்நிலையில் பிரபல இயக்குனர் துணை நடிகர் சமுத்திரகனிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபல இயக்குனர்களில் பாகுபலி ராஜமவுலியும் ஒருவர்.

-விளம்பரம்-

இவருடைய படங்களில் நடிப்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று ஹீரோக்கள் தவம் இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி அவர்கள் தான் இயக்கும் RRR படத்தில் சமுத்திரகனியை நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனே சமுத்திரகனியும் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொன்னார். பிறகு சமுத்திரகனி தன்னுடைய சொந்த பணத்தில் ட்ராவெல்லிங் டிக்கெட்டையும், தங்கும் ஹோட்டலையும் புக் செய்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : சுப்ரமணியபுறம் படத்திற்கு முன்பாகவே விக்ரமின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ள சசிகுமார். இதோ அந்த காட்சி.

- Advertisement -

உடனே டிக்கெட் புக்கிங் செய்ய ராஜமவுலியின் மேனேஜர் சமுத்திரக்கனிக்கு கால் செய்து கேட்டபோது நானே செய்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார். சமுத்திரக்கனியும் ராஜமௌலியை சந்தித்து பேசினார். அப்போது ராஜமவுலி உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனே சமுத்திரக்கனி இது எனக்கு நீங்கள் கொடுத்திருக்கிற வாய்ப்பு. உங்களுக்கு எவ்வளவு தோன்றுகிறதோ அதைச் சொல்லுங்கள் நான் சொல்லி இருக்கிறார் சமுத்திரகனி. சமுத்திரகனியும் சொன்ன மாதிரி நடித்து கொடுத்தார். அதற்கு ராஜமௌலி, சமுத்திரகனிக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து உள்ளார். உடனே சமுத்திரகனி எனக்கு நீங்கள் அதிகமாக கொடுத்து இருக்கிறீர்கள் என்று சொன்னதற்கு உடனே ராஜமவுலி இல்லை நான் சரியாகத்தான் கொடுத்து இருக்கிறேன் என்று கூறினார்.

சமுத்திரகனியின் இந்த பண்பும், பணிவும் தான் வெற்றிக்கு காரணம். பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படம் RRR. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திற்கு முன்னர் நடந்த கதையை மையமாக கொண்டது. அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement