என்னம்மா இப்படி பண்ணிறீங்க – செளந்தர்யாவுக்காக அவரின் காதலன் விஷ்ணு செய்த மோசடி வேலை

0
206
- Advertisement -

சௌந்தர்யாவுக்காக அவருடைய காதலன் விஷ்ணு செய்திருக்கும் மோசடி வேலை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 103 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா, ராணவ்,மஞ்சரி, அருண் பிரசாத், தீபக் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

பின் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால், ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

பின் ஜாக்குலின் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இது எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில சீசன்களாகவே போட்டியாளர்களுக்கு வெளியே பி.ஆர் வேலைகள் அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சீசனில் சௌந்தர்யாவிற்கு தான் பி.ஆர் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். சௌந்தர்யா எதுவுமே செய்யாமல் இந்த சீசனில் பி ஆர் உதவியுடன் பைனல் வரை வந்துட்டார் என்று சுனிதா நேரடியாகவே கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

சௌந்தர்யா குறித்த சர்ச்சை:

ஆரம்பத்தில் இதை சௌந்தர்யா மறுத்தாலும் கடைசியில் தனக்காக பி.ஆர் வேலை செய்து இருப்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சௌந்தர்யாவின் பிஆர் டீம் செய்திருக்கும் மோசடி குறித்து சனம் செட்டி வெளியிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, இன்னும் பைனலுக்கு சில தினங்கள் தான் இருக்கிறது. இதனால் சௌந்தர்யாவை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அவருடைய காதலன் விஷ்ணு விஜய் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

விஷ்ணு செய்த மோசடி:

சௌந்தர்யாவுக்கு வாக்களிக்க கொடுக்கப்பட்ட மிஸ்டு கால் நம்பரை சௌந்தர்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் இணைத்து, கால் என்ற ஆப்ஷனுடன் கொடுத்திருக்கிறார். அதேபோல் விஷ்ணு instagram பக்கத்திலும் எனக்கு உடனே கால் பண்ணுங்கள் அவசரம் என்று சொல்லி சௌந்தர்யா உடைய நம்பரை போட்டு இருக்கிறார். பலருமே என்ன ஆனது? என்ற பயத்திலேயே கால் பண்ணுவார்கள். இதை ஆதாரத்துடன் சனம்செட்டி சோசியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கிறார். இதை பார்த்த பலரும் இப்படியெல்லாம் செய்வீங்க? என்று சௌந்தர்யாவையும் அவருடைய காதலன் விஷ்ணுவையும் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement