அப்பா கிறிஸ்ட்டின், அம்மா இந்து நான் முஸ்லீம் – மோனிகா மதம் மாற்றத்திற்கு பின்னால் இப்படி ஒரு விஷயமா.

0
2117
monika
- Advertisement -

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகிகளாக மாறியவர்கள் பல பேர் இருக்கிறார்கள் மீனா துவங்கி பேபி ஷாலினி வரை பல நடிகைகள் இந்த வரிசையில் அடக்கம். அந்த வகையில் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ,மோனிகா. தமிழில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is Monica-1.jpg

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தது. இவரது இயற் பெயர் மாருதி ராஜ். ஆனால், திருமணத்திற்காக தனது பெயரை மோனிகா என்று மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் மலையாள படத்திற்காக தனது பெயரை பர்வான என்றும் மாற்றிக்கொண்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்துவாக இருந்த இஸ்லாம் மதத்திற்கு மாறிஇருந்தார்.

- Advertisement -

மதம் மாற்றத்திற்கு பின்னர் மோனிகா என பெயர் கொண்ட இவர் தனது பெயரை எம்.ஜி.ரஹிமா என பெயர் மாற்றிக்கொண்டார்.பெயரை மாற்றிக் கொண்டது பற்றி இவர் கூறியதாவது:-நான் இஸ்லாம் மதத்தை 2010-ல் இருந்தே பின்பற்றுகிறேன். எனது தந்தை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். என் தாய் இந்து மதத்தை சேர்ந்தவர். நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். நான் நடிகையாக இருப்பதால் வெளியில் செல்வதற்கு சிரமமாக இருந்தது. அதனால் பர்தா அணிய ஆரம்பித்தேன்.

This image has an empty alt attribute; its file name is Monica-2.jpg

இது எனக்கு சவுகரியமாகவும் சுதந்திரமாகவும் இருந்தது என்று கூறியிருந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மாலிக்கை திருமணம் செய்துகொள்த்தான் நடிகை மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்று பின்னர் தெரிய வந்தது. திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து முழுமையாக நிறுத்தி விட்டார் மோனிகா. அவ்வளவு ஏன் இவர் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதை கூட நிறுத்தி விட்டார்.

-விளம்பரம்-
Advertisement