சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்..! விஷால் வெளியிட்ட உண்மை..!

0
494
Vishal

இரும்புத்திரை’ படத்துக்குப் பிறகு, விஷால் நடித்து வரும் ‘சண்டக்கோழி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ‘சண்டக்கோழி’ படம் நல்ல ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து உருவாகி வரும் ‘சண்டக்கோழி 2’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

sandakozhi

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடித்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால், சண்டக்கோழி பட கதை எனக்காக எழுதினது இல்லை, இது சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை. ஒரு சமயம் தற்செயலாக இந்த படத்தின் கதையை நான் படித்தபோது எனக்கு இந்த படத்தின் கதை மிகவும் பிடித்துப்போய்விட்டது. இதனால் நான் லிங்குசாமியிடம் இந்த படத்தில் நான் நடிக்கலாமா என்று கேட்டேன்.

surya

முதலில் யோசித்த லிங்குசாமி பின்னர் ஒப்புக் கொண்டார். எனக்கு சண்டக்கோழி படம் ஒரு நல்ல ஆக்ஷன் ஹீரோ என்று அடையாளத்தை கொடுத்தது, தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவிலும் ஒரு இமேஜை எனக்கு கொடுத்தது இந்த படம் தான் என்று கூறியுள்ளார் நடிகர் விஷால். இயக்குனர் லிங்குசாமி சூர்யாவை வைத்து “அஞ்சான்” படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அந்த படம் படுதோல்வியடைந்தது. ஒருவேளை சண்டகோழி படத்தில் சூர்யா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை கமண்ட்டில் தெரிவியுங்கள்.