2013-ம் ஆண்டு வெளிவந்த `யாருடா மகேஷ்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் சந்தீப் கிஷன். பிறகு மூன்று வருடங்கள் கழித்து `மாநகரம்’ படம் மூலம் பிரபலமானார். மேலும், தான் நடிக்கும் படங்களைத் தயாரிக்கவும் ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் கலந்துகட்டி அடிக்கும் சந்தீப்பின் அடுத்த படம், `நரகாசூரன்’. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சந்தீப் கிஷன், சினிமாவில் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

உதவி இயக்குநர் ஆகணும்னு நினைச்சதில்லை, ஒருநாள் எதார்த்தமா கெளதம் சாரை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே என்னை உதவியாளரா அவர்கிட்ட வந்து சேர்ந்துக்க சொன்னார். அப்போ, அவர் `சென்னையில் ஒரு மழைக்காலம்’னு புதுமுகங்களை வெச்சுப் படம் எடுத்துக்கிட்டு இருந்தார். அப்புறம் `வாரணம் ஆயிரம்’ படத்துல உதவி இயக்குநரா சேர்ந்தேன். அப்போதான் எனக்குத் தெரிய வந்துச்சு, என்னோட சேர்ந்து மொத்தம் 12 உதவி இயக்குநர்கள் அந்தப் படத்துல இருக்காங்கனு

சினிமா வாழ்க்கை

Advertisement

தெலுங்கு துறையில இருக்கிற பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு என் மாமா. இவர் சினிமா துறையில இருக்கிறதுனால நான் கஷ்டப்படாம சினிமாவுக்கு வந்துட்டதா சிலர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. உண்மை அது இல்லை. நான் நிறைய ஆடிஷன்ஸ்ல கலந்துக்கிட்டு பல அவமானங்களைத் தாண்டிதான் சினிமாவுக்கு வந்திருக்கேன். ஜோதிகாவுக்கு அண்ணனா நடிக்க சிம்பு படத்துல சான்ஸ் கிடைக்குமானு கேட்ட காலமெல்லாம் உண்டு.

Advertisement

வருங்கால திட்டம்

`எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்ததே பாலிவுட் சினிமாதான். எனக்கு இந்தி சுத்தமா தெரியாது. `ஷோர் இன் தி சிட்டி’ படத்துல லைவ் ரெக்கார்டிங் மோட்ல ஷூட் பண்ணாங்க. அதாவது, படத்துக்கு டப்பிங் கிடையாது. ஸ்பாட்ல நாம பேசுறதை லைவ் ரெக்கார்டிங் பண்ணுவாங்க. இந்தப் படத்தோட இயக்குநர் ராஜ் நிதிமௌரு மற்றும் கிருஷ்ணா டிகே இப்போ அமேசான் பிரைம் வீடியோவுல ஒரு வெப் சீரீஸ் எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதுல கேமியோ ரோல் பண்றேன்.”

Advertisement