நீண்ட நாள் காதலியைக் கரம் பிடித்த ‘சந்தியா ராகம்’ சீரியல் நடிகர் – வைரலாகும் புகைப்படம், குவியும் வாழ்த்துகள்

0
198
- Advertisement -

சந்தியா ராகம் சீரியல் நடிகருக்கு திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவும் சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலுமே வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் பிரபலமான தொடர்களில் ஒன்று தான் சந்தியா ராகம். இந்த தொடர் அக்கா-தங்கை பாச கதையை மையமாகக் கொண்டது. சீரியலில் எதிர்பாராத விதமாக அக்காவின் வருங்கால கணவரை தங்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் அக்கா தங்கைக்கிடையே பிரிவு ஏற்படுகிறது. பிரிந்து இருந்தாலுமே ஒருவருக்கு ஒருவர் பாசமாகத்தான் இருந்தார்கள்.

- Advertisement -

சந்தியாராகம் சீரியல்:

அப்போது தங்கைக்கு கேன்சர் நோய் வந்ததால் அவர் இறந்து விடுகிறார். தங்கையின் மகள் மாயாவை பார்க்கும் பொறுப்பை அக்கா ஜானகி ஏற்கிறார். பல கஷ்டங்களுக்கு பிறகு மாயாவை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார் ஜானகி. பின் எல்லோருடைய மனதிலும் மாயா இடம் பிடிக்கிறார். இப்படி இருக்கும் தருணத்தில் தான் மாயா, தனாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது.

சீரியல் கதை:

இதில் தனத்தை திருமணம் செய்ய இருந்தவர் கெட்டவர் என்று மாயாவுக்கு தெரிய வந்தது. இதனால் தனத்திற்கு கதிரை திருமணம் செய்து வைக்கிறார் மாயா. ஆனா,ல் இது வீட்டிற்கு யாருக்கும் தெரியவில்லை. இதனால் மாயாவை எல்லோருமே வெறுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த உண்மை ஜானகிக்கு தெரிய வந்து மாயாவிற்கு சப்போர்ட் செய்கிறார். இதனால் ஜானகியின் கணவர் அவரை வெறுத்து ஒதுக்குகிறார். இனி அடுத்து என்ன? நடக்கப் போகிறது என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

குரு குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குரு. இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த ஜீ குடும்ப விருதுகள் 2024இல் பிரஸ் பேஸ் ஆப் தி இயர் என்ற விருது இவருக்கு தான் கிடைத்திருந்தது. முதல் தொடரிலேயே இவருக்கு ரசிகர்கள் ரசிகர்கள் பேராதரவு கிடைத்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

குரு திருமணம்:

இவர் ரேச்சல் என்பவரை தான் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுடைய திருமணம் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றிருக்கிறது. ரேச்சல்- குரு இருவரும் சேர்ந்து பாடலில் நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது கணவன் மனைவியாக இருக்கிறார்கள். இந்த திருமணத்தில் சின்னத்திரை சந்தியா ராகம் சீரியலை சேர்ந்த நடிகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள்.

Advertisement