இந்தியாவின் டென்னில் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  சானியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துக் கொண்டதை சம்பவம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்த நிலையில் அபினந்தன் கைது செய்தது குறித்து சானியா மிர்சா எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இதற்குப் பதிலடியாக அவர் நீண்ட விளக்கத்தை அளித்திருந்தார். அதில், “பிரபலங்கள் என்றாலே தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்று கோபமாக கூறியிருந்தார். இதற்கும் பல்வேறு விமர்சனங்கள் வந்தன.

Advertisement

இந்நிலையில், இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனை வரவேற்று சானியா ட்வீட் செய்திருந்தார். அதில், “விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன். எங்களின் உண்மையான ஹீரோவாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் காட்டிய துணிவு மற்றும் கண்ணியத்திற்கு இந்த நாடே உங்களை வணங்குகிறது” என்று கூறியிருந்தார்.

உடனே நெட்டிசன்கள், இந்திய விமானப்படை அதிகாரியை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தபோது, உங்களது கணவர் சோயப் மாலிக் என்ன பதிவிட்டார் தெரியுமா? என அவரின் ட்வீட்டை பதிவிட்டுள்ளனர். அந்த டீவீட்டில் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘பாகிஸ்தான் சிந்தாபாத் ‘என்று ட்வீட் செய்திருந்தார்.

Advertisement
Advertisement