எனக்கு வற்புறுத்தி 50 முறை முத்தம் கொடுத்தார்கள்..!நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை பகீர் புகார்..!

0
799

தமிழ் சினிமாவில் #metoo விவகாரம் மிக பெரிய பூகம்பகமாக வெடித்துள்ளது. பாடகி சின்மயி,வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பிறகு பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

Sanjana galrani

இதில் நம்ப முடியாத பல முக்கிய பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல தென்னிந்திய நடிகையான நிக்கி கல்ராணியின் தங்கையான நடிகை சஞ்சனா கல்ராணி திரைப்படத்தில் நடித்த போது தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.

பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, கன்னடத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஒரு காதல் செய்வீர் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும், இதுவரை 45 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது “இளைய தளபதி ” என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

Sanjana Galrani

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சஞ்சனா கல்ராணி, எனக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது. நான் 16 வயது இருக்கும் போது “கண்டா கண்டாய்தி” என்ற படத்தில் நடித்த போது படத்தில் ஒரு முத்தக்காட்சி இருக்கிறது என்று மட்டும் கையெழுத்து வாங்கினார்கள்.

ஆனால், அந்த படத்தில் 50 கும் மேற்பட்ட முத்த காட்சிகளில் என்னை வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தார்கள். மேலும், என்னை பல ஆபாசமான காட்சிகளிலும் வற்புறுத்தி நடிக்க வைத்தார்கள்.இதனால் நான் மிகவும் மனம் நொந்து தற்கொலை வரை சென்றேன் பின்னர் என் அம்மா தான் எனக்கு தைரியம் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.