படப்பிடிப்பில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டதால் விஜய்யின் லியோ பட நடிகர் சஞ்சய் தத்திற்கு படுகாயம் அடைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் சஞ்சய் தத். இவர் இந்திய அளவில் பிரபலமான கேஜிஎப் படத்தில் நடித்து இருந்தார். கேஜிஎப் என்ற கன்னட படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. கன்னட நடிகர் யாஷ் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகி இருந்தது. அதோடு கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. மேலும், இந்த படத்தில் அதிரா என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்த திரைப்படத்தின் மூலம் இவர் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். தற்போது இவர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
லியோ படம்:
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. காஷ்மீரில் எடுக்கப்பட்ட லியோ படத்தின் சில காட்சி புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாக இருந்தது
சஞ்சய் தத் நடிக்கும் படம்:
இந்த படப்பிடிப்பில் சஞ்சய் தத் கலந்து கொண்டிருந்தார். அதற்கான புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து தற்போது இவர் கன்னட நடிகர் துருவா சார்ஜா நடித்து வரும் கேடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரேம் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் மகுடி சாலையில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படப்பிடிப்பில் துருவா சார்ஜா மற்றும் வில்லன் சஞ்சய் தத் ஆகியோர் வெறித்தனமாக சண்டை போடும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சஞ்சய் தத்துக்கு ஏற்பட்ட விபத்து:
இந்த நிலையில் சஞ்சய் தத்துக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, கேடி படத்தின் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்பாராத விதமாக டம்மி வெடிகுண்டு கொஞ்சம் வீரியத்துடன் வெடித்து இருக்கிறது. இது சஞ்சய் தத்துக்கு அருகிலேயே வெடித்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
சஞ்சய் தத் டீவ்ட்:
அதோடு அவருக்கு முகம், கை மற்றும் முழங்கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் உண்மையல்ல என்றும், கடவுள் அருளால், தான் நலமுடன் இருப்பதாகவும், KD படக்குழு தன்னை நல்லபடியாய் கவனித்துக்கொள்வதாகவும் ட்வீட் பதிவிட்டு தனது நலத்தை உறுதி செய்து இருக்கிறார் நடிகர் சஞ்சய் தத்.