என்னது உடலை குறைத்ததற்க்கு எல்லாம் பரிசா – ஆல்யா மானஸாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய சஞ்சீவ்.

0
330
alya
- Advertisement -

மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுக்க ஆலியா மானசா உடல் எடை குறைத்ததற்கு சஞ்சீவ் கொடுத்திருக்கும் பரிசு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார் ஆல்யா.

-விளம்பரம்-

பின் ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.

- Advertisement -

ஆல்யா- சஞ்ஜீவ் நடிக்கும் சீரியல் :

பிறகு விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். பின் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

-விளம்பரம்-

உடல் எடை குறைவு:

ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறார். இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா உடல் எடை கூடி இருக்கிறார். இவர் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும், இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆல்யா ரசிகர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார். சமீபத்தில் ஆல்யா சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறி இருந்தார்.

கம்பேக் கொடுக்கும் ஆல்யா:

இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர் கூடிய விரைவில் சீரியலில் நடிக்க இருக்கிறார். ஆனால், எந்த சேனல் சீரியல் என்று தான் தெரியவில்லை. இன்னும் இரண்டு மாதத்தில் சீரியலில் என்னை பார்க்கலாம் என்று ஆல்யா கூறி இருந்தார். இதனால் ஆல்யா மானஸா சீரியலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த வீடியோவை இவர் ஏற்கனவே தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

சஞ்சீவ் கொடுத்த பரிசு:

இந்நிலையில் திடீரென்று சஞ்சீவ், ஆலியாவிற்கு பரிசு தந்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது ஆல்யா மானசா புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். இதற்காக இவர் கடினமாக உடற்பயிற்சி செய்து இரண்டு மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்து இருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு தான் ஆல்யா உடல் எடையை குறைத்து வருகிறாராம். இதை பாராட்டும் விதமாக ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் அவருக்கு அழகான பரிசை கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவை தான் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement