என்னோட Friendஅ வச்சி தான் Ok Ok பார்த்த கேரக்டர பண்ணேன் – Reallife பார்த்த குறித்து பேசிய சந்தானம்

0
1624
- Advertisement -

படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் பார்த்தா இப்படித்தான் என்று தன்னுடைய நண்பர் குறித்து சந்தானம் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் நடிகர் சந்தானம், குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார் சந்தானம்.

- Advertisement -

சந்தானத்தின் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்தார்.
மேலும், இவர் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சமீப காலமாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.

சந்தானம் நடிக்கும் படங்கள்:

பின் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான படம் குலு குலு. இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி இருக்கிறார். இந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை .சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ . இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் “கிக்” என்ற படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

சந்தானம் அளித்த பேட்டி:

பின் இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் பெயரில்லாத ஒரு படத்திலும், அதற்கு பிறகு தில்லுக்கு துட்டு பாகம் 3லும் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் சந்தானம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் பார்த்தா கதாபாத்திரம் குறித்து சொன்னது, என்னுடைய நண்பர் ராஜ்குமார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அவருடைய பிரதிபலிப்பாக தான் நான் நடித்திருந்தேன். நான் என்னுடைய நண்பர்களில் யார் கொஞ்சம் வித்தியாசமாக சிறப்பாக, இது பன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அவருடைய கதாபாத்திரத்தை பண்ணுவேன். அப்படித்தான் ராஜ்குமார் கதாபாத்திரத்தை அந்த படத்தில் பண்ணினேன்.

பார்த்தா குறித்து சொன்னது:

அவர் பேசுவது வேடிக்கையாகவும், சம்பந்தமில்லாமல் இருக்கும். சமீபத்தில் கூட ஒரு முறை பேசும்போது என்னடா காமெடி எல்லாம் பண்ற, எனக்கு சிரிப்பே வரல என்று என்னை கலாய்த்த பேசினார். பின் அவருடைய அப்பா இருக்கும் போது ஏண்டா புடலங்காய் என்று என்னை திட்டினார். அதற்கு அவர் அப்பா, ஏன் இப்படி எல்லாம் உன் நண்பரை பேசுகிறாய் என்று கேட்டார். இப்படி அவர் எதுவா இருந்தாலும் ஜாலியாக வேடிக்கையாக பேசுவார். பின் நான் அவனை பார்த்து, உன்னை வைத்து ஒரு படமே பண்ணி விட்டேன். இன்னும் இதை நீ நிறுத்தவில்லையா? என்றெல்லாம் நான் கூறி இருக்கிறேன்.

Advertisement