லொள்ளு சபாவிற்கு முன்பே ராதிகாவின் சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ள சந்தானம். எந்த சீரியல் தெரியுமா ? இதோ வீடியோ.

0
2886
santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்கு நுழைந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார்.

-விளம்பரம்-

வீடியோவை கான இந்த லிங்கை கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=u-sx_WlBreI

- Advertisement -

அதனை தொடர்ந்து இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். பின்னர் நடிகை ராதிகா இயக்கிய அண்ணாமலை என்ற தொடரிலும் நடிகர் சந்தானம் நடித்து இருந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானம் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்க வரும் முன்பு நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்தவர் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

ஆனால் நடிகர் சந்தானம் லொள்ளு சபாவில் இருந்தபோதே ஒரு லோக்கல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார் ஆம் ரைட் என்ற தொலைக்காட்சியில் நடிகர் சந்தானம் நேயர்களுடன் பேசும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து இருக்கிறார். அதே போல தான் இவர் அண்ணாமலை சீரியலிலும் நடித்துள்ளார்.அதுவும் ராதிகாவின் சூப்பர் ஹிட் சீரியலில்.

-விளம்பரம்-

சன் தொலைக்காட்சியில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘அண்ணாமலை’ சீரியலில் சந்தானம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதன் பின்னர் தான் இவர் விஜய் டிவியில் சகல vs ரகள, லொள்ளு சபா போன்ற நிகழ்ச்சியில் நடிக்கத்துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை சீரியலில் சந்தானம் நடித்த காட்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement