சந்தானம் பூர்விக ஊர், படித்த பள்ளி எதுன்னு தெரியுமா? பலரும் அறிந்திடாத தகவல் – வைரலாகும் வீடியோ

0
962
Santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானம் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

சினிமாவில் நடிக்க வரும் முன்பு சந்தானம் விஜய் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்தவர் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் நடிகர் சந்தானம் லொள்ளு சபாவில் இருந்தபோதே ஒரு லோக்கல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார் என்பது பலர் அறிந்திராத விஷயம். ;ரைட்’ என்ற தொலைக்காட்சியில் நடிகர் சந்தானம் நேயர்களுடன் பேசும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து இருக்கிறார். அதே போல படங்களில் நடிப்பதற்க்கு முன்பாக சந்தானம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அண்ணாமலை’ சீரியலிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சந்தானத்தின் திரைப்பயணம்:

அதன் பின்னர் தான் இவர் விஜய் டிவியில் சகல vs ரகள, லொள்ளு சபா போன்ற நிகழ்ச்சியில் நடிக்கத்துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானத்தை சிம்பு தான் சினிமாவில் அறிமுகம் செய்தார் என்று தான் பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படம் தான் சந்தானத்தின் முதல் படம் என்று பலர் நினைத்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அதற்கு முன்பாகவே நடிகர் சந்தானம், குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார் சந்தானம்.

santhanam

சந்தானம் நடிக்கும் படம்:

அதனை தொடர்ந்து சந்தானம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தார். பின் இவர் கடந்த சில வாருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். சந்தானம் இறுதியாக ‘சபாபதி’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகியுள்ளது. ஆனால், பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது சந்தானம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சந்தானம் பூர்விக ஊர்:

இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். இந்நிலையில் சந்தானத்தை பற்றி தெரியாத சில விஷயங்களைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். சந்தானத்தின் பிறந்த மற்றும் பூர்வீக ஊர், உறவினர்கள்,படித்த பள்ளி ஆகிய விவரங்களை பற்றிய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதில், சந்தானம் அவர்கள் சென்னை புழிச்சலூர் பகுதி தான் சந்தானம் பிறந்து வளர்ந்த ஊர். இவர் மரியநிவாஸ் என்ற பள்ளியில் தான் படித்தார்.

சந்தானம் பள்ளி,மேடை நாடகம் பற்றிய தகவல்:

பள்ளியில் படிக்கும்போதே மேடை நாடகத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் சிறுவயதில் இருந்தே பல நாடகங்களில் பங்கேற்று நடித்தாராம். அதோடு தில்லானா தில்லானா என்ற பாடலுக்கு பள்ளியில் முதலில் சந்தானம் மேடையேறி நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானத்தின் இரண்டு பெண் குழந்தைகளையும் மரியநிவாஸ் பள்ளியில் தான் ஆரம்பத்தில் சேர்த்தார். சந்தானத்தின் தந்தை ஆச்சாரி(கார்பென்டர்) வேலை செய்தவர். மேலும், பல்லாவரம் தான் சந்தானத்தின் பூர்விகம். அதாவது அவரின் தாத்தா பாட்டி வாழ்ந்த ஊர். ஒரு நல்லது கெட்டது, கிருஷ்ண பரமாத்மா கோவில் பூஜை என்றால் சந்தானம் சொந்த ஊருக்கு வருவார்.

Advertisement