குப்பட்டி ராமசாமி படம் குறித்த சர்ச்சைக்கு இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால், சமீப காலமாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி, குலு குலு, ஏஜென்ட் கண்ணாயிரம்,கிக் போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.

தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானதிற்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நிழல்கள் ரவி, தமிழ், ஜான் விஜய், எம் எஸ் பாஸ்கர், ரவி மரியா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். பீப்பிள் மீடியா ,நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பின் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

வடக்குப்பட்டி ராமசாமி படம்:

இந்த ட்ரெய்லரில் வரும் பெரியார் குறித்த காட்சி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. குறிப்பாக, அதில் சந்தானம் அவர்கள், நான் அந்த ராமசாமி இல்லை என்று கூறி கூறியிருப்பார். இது அவர் பெரியாரைக் குறித்து தான் கூறியிருக்கிறார் என்று விமர்சித்து இருக்கிறார்கள். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த வாரம் இது தொடர்பாக கூட படத்தின் இயக்குனர் விளக்கம் கொடுத்து பேட்டி அளித்து இருந்தார். இருந்தாலும், பலர் சந்தானத்தை திட்டி வருகிறார்கள்.

விழாவில் சந்தானம்:

இந்நிலையில் இன்று வடக்குப்பட்டி ராமசாமி படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. அப்போது விழாவில் சந்தானம், நான் ரெண்டு இயக்குனர்கள் படத்தில் கேள்வி கேட்காமல் நடிப்பேன். ஒன்று பிரேம் ஆனந்த் இன்னொன்று கார்த்தி யோகி. காரணம் அவர்களுடைய படத்தில் ஹியூமர் அவ்வளவு இருக்கும். இந்த படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. டிடி ரிட்டன்ஸ் படத்துக்கு பிறகு எனக்கு ஒரு மற்றொரு ஹிட் தேவைப்படுகிறது. அது கார்த்திக் மூலம் கிடைக்க இருப்பது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.

Advertisement

சர்ச்சை குறித்து சந்தானம் விளக்கம்:

படத்தில் ஒரு விஷயம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அப்போது நான் தயாரிப்பாளிடம், எதற்கும் பயப்பட வேண்டாம். இதெல்லாம் படத்திற்கான ப்ரோமோஷன் என நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இந்த படத்தில் எந்த தவறான விஷயமும் கிடையாது. ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமே எங்களுடைய நோக்கம். மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும், தாக்கி பேச வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது.

Advertisement

ராமசாமி பெயர் வந்த காரணம்:

இந்த படத்தில் ராமசாமி என்ற பெயர் எப்படி வந்தது என்றால் நானும் இயக்குனரும் கவுண்டமணி சாரின் ரசிகர்கள். டிக்கிலோனா அவருடைய டயலாக். அப்படித்தான் வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணியின் வசனம் இது. நான் சினிமாவுக்கு வந்த நோக்கம் மக்களாகிய உங்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான். கடவுளுக்கு தெரியும் காசு பணத்தை நோக்கி போக வேண்டி இருந்தால் போயிருப்பேன். அடுத்து புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்பது தான் ஆசை என்று கூறி இருக்கிறார்.

Advertisement