விஜய் டீவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தனது திரை வாழ்வை துவங்கியவர் நடிகர் சந்தானம். அதன் பின்னர் மன்மதன் படத்தில் நடித்து நல்ல காமெடி நடிகர் என்ற பெயர் பெற்றார். பின்னர் அடுத்தடுத்து பல காமெடி படங்களில் நடித்து புகழ்பெற்று, தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த காமெடி நடிகர் என்ற பெயரினையும் பெற்றார்.
காமெடியனாக திரையுலகில் கால் பதித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’, ’சக்கப்போடு போடு ராஜா’, ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன.
நடிகர் சந்தானம் கடந்த 2004 ஆம் ஆண்டே உஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார். சமீபத்தில் நடிகர் சந்தானம் தனது மகளுடன் இணைந்துசெய்த டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோ ஒரு புறம் இருக்க சமீபத்தில் நடிகர் சந்தானத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சந்தானதின் அம்மா, அப்பா மற்றும் தங்கையும் இருக்கிறார்கள்.