வெளியானது ஹர்பஜன், சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக்.

0
1151
santhanam

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். சந்தானத்தின் நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் எப்போதும் பஞ்சமே இல்லை. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். ஆரம்பத்தில் இவருடைய சில படங்கள் தோல்வியில் முடிவடைந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ,ஏ1 போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது.

Santhanam Dikkilona Movie Pooja Stills | New Movie Posters

சமீபத்தில் சந்தானம் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த டகால்டி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் சந்தானம் அவர்கள் மூன்று வேடங்களில் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு இந்த படத்தில் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் டிக்கிலோனா உருவாகி வருகிறது.

- Advertisement -

இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அனகா, ஷிரின்,யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தியது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்நிலையில் சந்தானம் மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கின்ற டிக்கிலோனா(dikkilona) படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியானது. திரையில் இதுவரை பார்க்காத கதாபாத்திரத்தில் இந்த படத்தில் சந்தானம் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

-விளம்பரம்-
Advertisement