விஜய் முதல்வர் ஆவதில் என்ன தவறு இருக்கு.! ஏன்..ரஜினி முதல்வர்னு சொல்லலையா.? இயக்குனர் அதிரடி

0
637
Actor-vijay

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு பிறகு பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித் தான். ரஜினி மற்றும் கமல் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் விஜய் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

vijay actor

நடிகர் விஜய் சில ஆண்டுகளாகவே தனது படங்களில் அரசியல் சம்மந்தபட்ட வசனத்தை பேசுவது, மக்கள் பிரச்சனையை ஆதரித்து வசனங்களை பேசுவது போன்ற காட்சிகளை கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இதனால் விஜய் விரைவில் அரசியளுக்கு ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்

அதுமட்டுமல்லாமல் இன்னும் இரு தினங்களில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிறது. இதனை முன்னிட்டு நடிகர் விஜய்யை வருங்கால முதல்வர் என்று குறிப்பிட்டு விஜயின் ரசிகர்கள் பரவலாக போஸ்டர் ஒட்டி வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதுகுறித்து விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கூறுகையில்”இதில் என்ன தவறு உள்ளது, விஜய் முதல்வராக வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஏன், ரஜினியை வருங்கால முதல்வர் என்று அவருடைய ரசிகர்கள் 25 வருடமாக போஸ்டர் அடிக்கவில்லையா?’ என்று தெரிவித்துள்ளார்.