மாபெரும் ஹிட் அடித்த ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் மூலம் எனக்கு கிடைத்த வருமானம் என்ன தெரியுமா? சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்.

0
190
- Advertisement -

என்ஜாயி எஞ்சாமி பாடல் மூலம் எங்களுக்கு வருமானமே கிடைக்கவில்லை என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணின் மகளும் பிரபல பாடகியுமான தீ பாடிய பாடல்களில் ஒன்று என்ஜாய் எஞ்சாமி. இவருடன் இந்த பாடலை ராப் பாடகர் அறிவு என்பவரும் இணைந்து பாடி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்கள். அதே போல இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் இந்த பாடல் மிகப்பெரிய பிரபலமானது. அதிலும் குழந்தைகளை இந்த பாடல் மிகவும் கவர்ந்தது . நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

சந்தோஷ் நாராயணன் வீடியோ:

மேலும், இந்த பாடல் இந்திய அளவில் எந்த அளவிற்கு ஹிட் அடைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்படி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்த என்ஜாயி எஞ்சாமி பாடலின் மூலம் ஒரு ரூபாய் கூட வருமானம் கிடைக்கவில்லை என்று சந்தோஷ் நாராயணன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியா சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்த வீடியோவில் அவர், என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி உங்களுக்கே தெரியும்.

என்ஜாயி எஞ்சாமி பாடல் குறித்து சொன்னது:

ஒரு பைசா கூட அந்த பாடலின் மூலம் எங்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் காரணமாகவே நானே சொந்தமாக ஸ்டுடியோ தொடங்க உள்ளேன். தனி இசை கலைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் செயல்படும் தளங்கள் தேவை. எனது யூடியூப் சேனல் வருமானமும் மியூசிக் லேபிளுக்கு செல்கிறது.

-விளம்பரம்-

சந்தோஷ் நாராயணன் குறித்த தகவல்:

இதைப் பற்றி பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன். தனி இசை கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் சமீப காலமாக பறை இசை என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது சந்தோஷ் நாராயணன் தான். பா ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன் பின்னர் இவர் சூதுகவ்வும், ஜிகர்தண்டா, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பல்வேறு படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதோடு இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக அதில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெற்று விடும் அந்த பாட்டு மாபெரும் ஹிட் அடித்து விடுகிறது. அதே போல் இவர் இசையமைத்த அனைத்து படங்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பணியாற்றி வருகிறார்.

Advertisement