அந்த படத்துக்கு ஒரு நிமிசத்துல ஓகே சொன்னேன், ஆனால் – அஜித் பட வாய்ப்பை தவறவிட்டுள்ள சந்தோஷ் நாராயணன்.

0
998
santhosh
- Advertisement -

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குறித்து பல்வேறு பிரபலங்களும் புகழ்ந்துள்ளதை பற்றி நிறைய கேட்டுள்ளோம். அவருடன் பல ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட போது நடந்த ஒரு ஸ்வரைசமான சம்பவம் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் சமீப காலமாக பறை இசை என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது சந்தோஷ் நாராயணன் தான். பா ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-217.jpg

அதன் பின்னர் சூதுகவ்வும் ஜிகர்தண்டா மெட்ராஸ் கபாலி காலா போன்ற பல்வேறு படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் சந்தோஷ் நாராயணன் இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக அதில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெற்று விடும் அந்த பாட்டு மாபெரும் ஹிட் அடித்து விடுகிறது. அதே போல் இவர் இசையமைத்த அனைத்து படங்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் சமீபத்தில் இவர் தனுசுக்கு இசையமைத்த இரண்டு படங்களின் இசையும் வேற லெவல்.

- Advertisement -

தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைத்து இருந்தார்.இந்த இரண்டு படங்களின் பாடல்களும் வேற லெவலில் ஹிட் அடித்தது. அதிலும் ஜமகமே தந்திரம் படத்தின் ரக்கிட்ட ரக்கிட்ட பாடலும் கர்ணன் படத்தின் கண்டா வர சொல்லுங்க பாடலும் மாபெரும் வெற்றியடைந்து. சந்தோஷ் நாராயணன் இதுவரை விஜய், அஜித் படங்களுக்கு இசையமைத்தது கிடையாது.

வீடியோவில் 15 : 18 நிமிடத்தில் பார்க்கவும்

அதே போல அஜித் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்த போது இவர் தான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கேட்ட போது, விஸ்வாசம் படத்தின் போது கூட என்னை அணுகினார்கள். அதே போல விவேகம் படத்தின் போது கூட என்னை அனுகினார்கள். நான் ஒரு நிமிடத்தில் ஓகே சொல்லிவிட்டேன். ஆனால், அது அமையவில்லை என்று கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.

-விளம்பரம்-
Advertisement